ல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும். அவன் யதார்த்தமாக பேசிய ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான் :இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள
நபி அவர்கள் ஹஜ் காலத்தில் அங்கு வரும் கோத்திரங்களுக்கு முன்னிலையில் பின்வருமாறு கூறினார்கள், “என்னை உங்கள் சமூகத்திடம் சுமந்து செல்ல யாரும் உங்களில் இல்லையா? என் இறைவனின் வார்த்தைகளை முன்வைப்பதற்கு குறைஷிக்கோத்திரத்தினர் என்னைத் தடுக்கின்றன
அல்குர்ஆன் படைப்பினங்களின் வார்த்தைக்கு எழுத்திலும், கருத்திலும் எவ்வகையிலும் ஒத்துப்போகாத, யதார்த்தமான அல்லாஹ்வின் வார்த்தையாகும். இதை அல்லாஹ் ஆரம்பமாகவே பேசிவிட்டு, ஜிப்ரீல் மூலம் முஹம்மத் அவர்களின் உள்ளத்தில் பகுதி பகுதியாக இறக்கி வைத்தான். அவர் இதனை மக்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள். அல்லாஹ் கூறுகிறான் : இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.
எனவே இது படைக்கப்பட்ட ஒன்றல்ல. அல்லாஹ்வால் இறக்கப்பட்டது என்பதனை தெளிவாகப் புரிந்திடலாம்.
அல்குர்ஆனை மனிதர்களின் வார்த்தை எனக் கூறுவோரை அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களாக சித்தரிக்கிறான். அவர்களை ஸக்ர் எனும் நரகைக் கொண்டு எச்சரிக்கிறான். அல்லாஹ் கூறுகிறான் : “அப்பால் அவன் கூறினான்: “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. “இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.) அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.”
அல்குர்ஆனை நம்பிக்கை கொள்ளும் விடயத்தில் இரு கூட்டத்தினர் வழிதவறிவிட்டனர். அவர்கள் வருமாறு:
அ. ஜஹ்மிய்யாக்கள், முஃதஸிலாக்இவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுப்பவர்கள். குறிப்பாக அல்லாஹ்வின் பேசுதல் எனும் பண்பை மறுப்பவர்கள். இப் பண்பை அல்லாஹ்வின் படைப்பு என்று கூறுபவர்கள். இப் பண்பை அல்லாஹ்வுக்கு உடைமையாக்குவதானது படைப்புகளை அல்லாஹ்வுக்கு உடைமையாக்குவது போன்றாகும் என்பதே இவர்களின் நம்பிக்கையாகும். ‘அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வின் வீடு, அல்லாஹ்வின் ஒட்டகம்’ போன்ற உதாரணங்களில் இடம்பெற்றுள்ள ‘அடிமை’, ‘வீடு’, ‘ஒட்டகம்’ என்பவற்றைப் போல் ‘அல்லாஹ்வின் பேச்சு’ என்பதில் இடம்பெற்றுள்ள ‘பேச்சு’ ஐ யும் படைப்பாகக் கருதுகின்றனர். இவ்வாறான கருதுகோலின் அடிப்படையில் ‘அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு’ என்பதன் மூலம் அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை நிறுவுகின்றனர்.
அவர்களுக்கான மறுப்பு:ஓர் பொருளை அல்லாஹ்வுக்கு உடைமையாக்குவதானது படைப்புக்களை படைப்பாளனுக்கு உடைமையாக்குதல் எனும் வட்டத்திற்குள் நுழைந்துவிடும். இதற்கு உதாரணமாக ‘அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வின் வீடு’ போன்றவற்றைக் கூறலாம். வாழ்தல், கேட்டல், பார்த்தல், அறிதல், பேசுதல் போன்ற பண்புகளை அல்லாஹ்வுக்கு உடைமையாக்குவதானது பண்புகளை,அவற்றைக் கொண்டு வர்ணிக்கப்படும் ஒருவருக்கு உடைமையாக்குதல் எனும் வட்டத்திற்குள் நுழைந்து விடும். எனவே பொருளும், பண்பும் வெவ்வேறான பிரிவுகளாகும். அவற்றை ஒன்றாக நோக்குவது தவறானதாகும். அல்குர்ஆனை அல்லாஹ்வின் வார்த்தை அல்லது பேச்சு எனும் போது அது பண்புகள் எனும் வட்டத்தினுள் மாத்திரமே நுழையும் என்பதை இதனூடாக அறிந்திட முடியும். அத்துடன் இவர்களது வாதம் அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ ஆகியவற்றுக்கு முரணானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆ. குல்லாபியாக்கள், அஷாஇராக்கள், மாதுரீதிய்யாக்கள்.இவர்கள் அல்லாஹ்வின் பேசுதல் எனும் பண்பை உறுதிப்படுத்துபவர்கள். அவனது பேச்சின் கருத்து மிகவும் பழைமையானது என்றும் கூறுபவர்கள். ஆனால் பேச்சை முன்னிலைப்படுத்தவும், புதிதாக மாற்றம் பெறாத, அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொடர்புபடாத இதன் பழைமைவாய்ந்த கருத்தை சொல்லிடவும் ஓர் ஊடகமாக இருக்கும் இப் பேச்சின் எழுத்து வடிவமும், சப்தமும் படைக்கப்பட்டது என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
இவர்களின் பார்வையில்
இவர்களின் பார்வையில் பேச்சு என்பது எழுத்துகளும், சப்தங்களுமற்ற வெறும் கருத்து மாத்திரமே. ஆதம், ஹவ்வா அவர்கள் சுவனத்தில் கேட்ட அசரீரி சப்தமும், மரத்தடியில் மூஸா அவர்கள் கேட்ட அசரீரி சப்தமும் படைக்கப்பட்டவையே அன்றி அல்லாஹ்வின் யதார்த்தமான வார்த்தைகள் கிடையாது என்று இவர்கள் கருதுகின்றனர்.
அவர்களுக்கான மறுப்பு: கருத்து, சப்தம், எழுத்து அனைத்தும் ஒருசேர இடம்பெற்றதே பேச்சாகும். உள்ளத்தால் கதைத்துக் கொள்வதற்கு பேச்சு என்று ஒரு போதும் சொல்லிட முடியாது. அதற்கு ஒலி வடிவம் கொடுப்பதன் மூலமோ, அல்லது எழுத்து வடிவம் கொடுப்பதன் மூலமாகவோ மாத்திரமே சிறந்த பேச்சாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே அல்குர்ஆனும் கருத்து, எழுத்து, சப்தம் அனைத்தும் ஒரு சேரப் பெற்ற அல்லாஹ்வின் வார்த்தையாகும். அத்துடன் இவர்களது வாதம் அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ ஆகியவற்றுக்கு முரணானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆராய்ந்து பார்க்க முடியாது என்பதையே இவ்வசனம் குறிப்பிடுகிறது. மேலும் இவ்வுலகில் அல்லாஹ்வைக் காணமுடியாது என்பதற்கும், மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைக் காணமுடியும் என்பதற்கும் நிறைய சான்றுகள் அல்குர்ஆன், ஸுன்னா வில் இருக்கின்றன.