menu-icon menu-icon
அவ்லியாக்கள் (இறை நேசர்கள்)

முஃமின்கள் அனைவருமே இறைநேசர்களாவர். அல்லாஹ் கூறுகின்றான் : நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ்வே உதவுபவன

(அல்குர்ஆன் 02:257)
 

 

அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்புக்குரியவர்களும், உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களும் அவனை சரியான முறையில் அஞ்சி நடப்பவர்கள் தான். அல்லாஹ் கூறுகிறான் : உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.” (அல்குர்ஆன

(49:13)
 

 

யார் அல்லாஹ்வை அஞ்சி வாழ்கிறாரோ, அவரே அல்லாஹ்வின் நேசராக மாறிவிடுவார். அடியார்கள் அல்லாஹ்வை நேசிப்பது அவனுக்கு கட்டுப்பட்டு, அவனை விரும்புவதன் மூலமே, அல்லாஹ் அடியார்களை நேசிப்பது அவர்களை விரும்பி, அவர்களுக்கு உபகாரம் புரிவதன் மூலமே அமைகின்றது.

 

seegogImg
2 Related by Muslim, 8.

1. இறை நேசர்.

இறை நேசர் என்பவர் அல்லாஹ்வைப் பயந்து நடக்கும் ஓர் முஃமினாவார். அல்லாஹ் கூறுகிறான் : (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள

(அல்குர்ஆன் 10:62-63)
 

இறை நேசத்தில் இவர்களின் படித்தரங்கள் இறையச்சத்தில் ஏற்படும் படித்தரங்களை வைத்துத்தான் தீர்மானிக்கப்படும். மாறாக வம்சாவளியாகவோ, தான் இறைநேசன் என்று வாதாடுவதாலோ இறைநேசம் ஏற்படாது. அல்லாஹ் கூறுகிறான் : உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.” (அல்குர்ஆன்

(49: 13)
 

2. கராமத்துக்கள்.

கராமத் என்பது அல்லாஹ் தன் நேசர்களில் ஒருவருக்கு வழமைக்கு மாறான ஓர் காரியத்தை நிகழ்த்திக்காட்டுவதைக் குறிக்கும். இது அவரை கௌரவப்படுத்தவும், தான் பின்பற்றும் நபியை உண்மைப்படுத்தும் முகமாகவும் அவருக்கு வழங்கப்படுகிறது. கராமத் என்பது இருவேறு முறைகளில் நிகழ்கிறது.

அ. விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், ஆழ்ந்த அறிவு ஞானம் போன்றவை இறைநேசரிடம் காணப்படல். ஆ. பலம், மனோதத்துவம் போன்றவை காணப்படல்.

கராமத் என்பது முன் சென்ற சமூகத்தில் தோன்றி மறைந்த இறைநேசர்களுக்கும் இச்சமூகத்தின் ஆரம்பகால ஸஹாபாக்கள், தாபிஈன்களுக்கும் நிகழ்ந்துள்ளது. இது மறுமை நாள் வரும் வரையில் யாரெல்லாம் இறைநேசர்களாக அல்லாஹ்வால் அடையாளம் காணப்படுகிறார்களோ அவர்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது.

2 Related by Muslim, 8.

விதிமுறைகள் மற்றும் சான்றுகளின் ஆதாரங்கள்:

1. மூலாதாரங்கள்.

இதில் அல்குர்ஆன், சரியான ஹதீஸ்கள், அவ்விரண்டையும் ஒட்டிப் பெறப்படும் இஜ்மாபோன்றவை உள்ளடங்கும். இவற்றிலிருந்தே இஸ்லாமிய தூய கொள்கை (அகீதா), இஸ்லாமிய சட்டக்கலை (பிக்ஹ்), இஸ்லாமிய நற்பண்புகள் (ஸுலூக்) முதலியன பெறப்படுகின்றன. இவற்றில் மனிதக்கையூடல்களோ, பகுத்தறிவு வாதமோ, தனிமனித வழிபாட்டிற்கமைவான உட்பூசல்களோ நுழைக்கப்படமாட்டாது.

2. அல்குர்ஆன், ஸுன்னாவை விளங்கிக்கொள்ளும் விதம்.

இதனை எமக்கு முன் சென்ற ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் விளங்கி, செயற்பட்ட முறையில் நாமும் விளங்கி செயற்பட வேண்டும். அதைத் தவிர்த்து தத்துவவாதிகள், ஸூபியாக்கள், ஏனைய வழிகெட்டகொள்கைவாதிகள் போல் விளங்கி, செயற்பட முனைந்திடக் கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும

(அல்குர்ஆன் 04:115)
 
seegogImg

3. சீரான பகுத்தறிவ

அல்குர்ஆன், ஸுன்னாவை விளங்குவதில் சந்தேகங்கள், மனோ இச்சைகளற்ற, இறை வஹிக்கு முரண்படாத வகையில் பகுத்தறிவை பயன்படுத்திட முடியும். பகுத்தறிவால் எட்டமுடியாத சில விடயங்கள் மார்க்கத்தில் இருக்க வாய்ப்புள்ளன. ஆனால்பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாத சாத்தியமற்ற விடயங்கள் ஒரு போதும் மார்க்கத்தில் இருக்க முடியாது. இறை வஹிக்கும் ஓர் ஆய்வாளரின் பகுத்தறிவிற்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றினால் குறித்த அவரது சிந்தனைத் திறனில் தான் ஏதோ கோலாறு ஏற்பட்டிருக்கும். அந்நேரத்தில் பகுத்தறிவை விட இறை வஹியை முற்படுத்திட வேண்டும்.

4. பித்அத்துகள்.

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவற்றுக்கு பித்அத் எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. நபி அவர்கள் கூறினார்கள் : நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும

( அறிவிப்பவர்: ஆஇஷா)
 

இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தவைகளில் (பித்அத்களில்) பல வகைகள் காணப்படுகின்றன. அவை வருமாறு:

1. கொள்கை சார்ந்தவை:ஷீஆ, ஹவாரிஜ்கள், கத்ரிய்யாக்கள், முர்ஜிஆக்கள் போன்றோர்.

2. செயல் சார்ந்தவை: புரோகிதம், தரீக்கா போன்றவை.

3. அடிப்படை சார்ந்தவை: பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட துஆக்கள் போன்றவ

4. சேர்க்கப்படுபவை: காரணங்கள், அளவுகள், செய்யும் முறைகள், காலம், இடம், வகைகள் போன்றவற்றைக் கவனித்து அடிப்படையில் இருக்கும் வணக்க வழிபாட்டோடு மேலதிகமான சேர்க்கைகளை இணைத்தல்.

5. கடினமானவை: இணைவைத்தலும் அதன் வகைகளும்.

6. இலகுவானவை: கூட்டாக சேர்ந்து திக்ர் செய

7. இறை நிராகரிப்பைச் சார்ந்தவை: அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தல்.

8. பாவத்தைச் சார்ந்தவை: தடுக்கப்பட்டவற்றை செவிமடுத்தல்.

seegogImg

3. நற்பண்புகள்.

பொறுமை, தர்மம், வீரம், சாந்தம், மன்னிக்கும் மனப்பான்மை, பணிவு போன்ற பண்புகளைக் கடைபிடிப்பதும், அவற்றுக்குப் புறம்பானவற்றைத் தவிரந்து கொள்வதும், பெற்றோருக்கு உபகாரம் செய்தல், உறவினர்களுடன் சேர்ந்திருத்தல், அயலவர்களுடன் அழகான முறையில்நடந்து கொள்ளல், அநாதைகள், வறியவர்கள், வழிப்போக்கர்கள் போன்றோருக்கு உதவி செய்தல் போன்றன நற்பண்புகளில் முதன்மையானவை. அல்லாஹ் கூறுகிறான்: எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.”

(அல்குர்ஆன் 07:199)
 

நபி அவர்கள் கூறினார்கள் : மறுமையில் அமல்கள் நிறுக்கப்படும்) தராசில் நற்குணங்களை விடக் கனமானது எதுவும் கிடையாது.

( அறிவிப்பவர்: அபுத் தர்)
 
seegogImg
seegogImg

நபி அவர்கள் கூறினார்கள் : “யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறானயார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்

( அறிவிப்பவர்: அபூஹுரைரா)
 
seegogImg