முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமூகத்தினராவர். அவர்களின் கட்டமைப்பும், சீர்திருத்தங்களும், எழுச்சியும், நோக்கமும் பின்வரும் விடயங்களின் அடிப்படையிலே நிறைவேற்றப்பட வேண்டும். அவை வருமாறு:
நபி அவர்கள் கூறினார்கள் : ‘யார்பைஅத் செய்யாமல் மரணிக்கிறாரோ அவர் அறியாமைக்காலத்தில் மரணித்தவரைப் போலவே மரணிப’.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும
நபி அவர்கள் கூறினார்கள் : “ (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாத’.
நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்' என்றார்கள். மேலும்,’.நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும், வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும், எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும் கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர' என்று எங்களிடம் நபி அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும
ஆட்சியாளர்களுக்கு எதிராக பின்வரும் நிபந்தனையின் அடிப்படையிலன்றி ஆர்ப்பாட்டங்களைப் புரியலாகாது. அவை வருமாறு
வதந்திகள், தெளிவற்ற செய்திகள் போன்றவற்றை தவிர்த்து, அறிவியல் பூர்வமாகவும், கண்கூடாகவும் ஆட்சியாளர்களிடம் தெளிவான இறைநிராகரிப்பைக் காணுதல்.
இறை நிராகரிப்பிற்காக மாத்திரமே ஆர்ப்பாட்டங்களையும், கிளர்ச்சிகளையும் மேற்கொள்ளலாமே தவிர, அவர்களிடம் காணப்படும் தீய குணங்கள், கெட்ட விடயங்கள் போன்றவற்றுக்காக அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறைநிராகரிப்பு என்பது அவர்களிடம் வெளிப்படையாகவே தென்பட வேண்டும். மறைமுகமாக இருக்கும் விடயங்களுக்காக கிளர்ச்சிகள் செய்வது கூடாத
அவர் செய்யும் செயல் இறைநிராகரிப்புத் தான் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதாக இருக்க வேண்டும். இரண்டிற்கும் இடம்பாடான, சந்தேகமான, கருத்து வேற்றுமையுள்ள ஒரு பிரச்சினையை வைத்து அவரைக் காபிராக்கி அவருக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்த முடியாது.
முஸ்லிம்களினதும் பலத்தை இல்லாமல் செய்திடும் அளவிற்கு இவ் ஆர்பாட்டங்களும், கிளர்ச்சிகளும் இருக்கக்கூடாது. அவ்வாறானசேதம் ஏற்படுமானால் அமைதியாக இருப்பதே சிறந்தத.
அல்லாஹ் கூறுகிறான் : உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஸகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள”
மேற்கண்ட வசனத்தில் பலவீனமாக இருக்கும் நிலையில் போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுமாறு பணிக்கப்பட்ட அவர்களை பலம் வந்ததும் போரிடுமாறு அல்லாஹ் பணித்துள்ளான்.