ஸஹாபி என்பவர் நபி அவர்களுடன் இருந்து, அவரை விசுவாசம் கொண்டு, அவ் விசுவாசத்தின் அடிப்படையில் மரணித்தவராவார். ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றவர்கள். நபிமார்களுக்கு அடுத்ததாக மனிதர்களின் சிறந்த வர்க்கத்தினர். உலகில் தோன்றிய சமுதாயங்களில் மிகவும் சிறந்தவர்கள். நபி அவர்கள் கூறினார்கள், “எனது சமூகத்தில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர்”
இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள், ஏனெனில் தனது நபிக்குத் தோழர்களாக இருக்க அல்லாஹ்வே இவர்களைத் தேர்ந்தெடுத்து, பரிசுத்தப்படுத்தி, இவர்களைப் பொருந்திக் கொண்டதுடன் அவர்களது தவறை மன்னித்தும் விட்டான். அவர்களைத் தனது வேதத்தில் மிக கண்ணியமான பண்புகளை வைத்து வர்ணித்துள்ளான், நல்ல பல வாக்குறுதிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளான்.
இவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான், முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
அவர்களுக்கு மத்தியில் காணப்படும் பொதுவான தராதரங்கள்:
இவர்கள் ஹிஜ்ரத், உதவி (நுஸ்ரத்) இரண்டிலும் பங்கெடுத்ததுடன் அல்லாஹ்வும் தனது வேதத்தில் இவர்களையே முற்படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); மேலும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள். இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவுக்கு முஹாஜிர்கள் வர) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களிலதேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
மேலும், இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும
மேலும், நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான
அல்லாஹ் கூறுகிறான்: அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
நபி அவர்கள் ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ என்பவர் விடயத்தில் உமர், 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்' என்று கூறிய போது பின்வருமாறு கூறினார்கள் : இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்' என்றார்கள
அல்லாஹ் கூறுகிறான் : முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான
நபி அவர்கள் கூறினார்கள் : அந்த மரத்திற்கு கீழ் உடன்படிக்கை செய்துகொண்ட எவரும் அல்லாஹ் நாடினால் நரகில் நுழைய மாட்டார்கள
நபி அவர்களுக்குப் பின் இச் சமூகத்தில் மிகவும் சிறப்புக்குரியவர் அபூபக்கர் அவர்களாவர். அதற்கு அடுத்து உமர் , இதில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அலீ அவர்கள் கூபாவில் வைத்து ஒரு மின்பரிலஇந்த சமூகத்தில் நபியவர்களுக்கு அடுத்து சிறந்தவர் அபூபக்ர், பின்பு உமர்" . இதனை அலீ அவர்கள் தெளிவான அறிவின்றி உறுதியாகக் கூறமாட்டார்கள். அவர்கள் இருவருக்கும் அடுத்து உஸ்மான் ஆவார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் அறிவிக்கிறார்கள்,
“நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம்.
அபூ பக்ர் அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான் அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
மற்றொரு அறிவிப்பில் "இ(வ்வாறு நாம் தரம் பிரிப்பதான)து நபியவர்களையும் எட்டும், அவர்கள் அதனைத் தடுக்க மாட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது . இமாம் ஸுப்யான் அஸ்ஸௌரீ (ரஹ்) கூறினார்கள் : அபூ பக்ர் , உமர் ஆகிய இருவரைக்கான அலீ அவர்களை யார் முற்படுத்துகின்றாரோ அவர் முஹாஜிரீன்களையும், அன்ஸாரிகளையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார், ஏனெனில் அவர்கள் தான் அபூ பக்ர் அவர்களை ஆட்சியில் முற்படுத்தினார்கள
அதற்கு அடுத்ததாக அலி அவர்கள் சிறப்புக்குரியவராக காணப்படுகிறார். சிறப்பில் எவ்வாறு இவர்கள் தொடராக இருக்கிறார்களோ, ஆட்சியிலும் அவ்வாறே தொடராக இருக்கிறார்கள
இதில் அடங்குபவர்கள் வருமாறு: நான்கு கலீபாக்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப், ஸஃத் இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், ஸுபைர் இப்னுல் அவாம், அபூ உபைதா ஆமிரஇப்னு ஜர்ராஹ், ஸஈத் இப்னு ஸைத
ரழியல்லாஹு அன்ஹும்-, இவர்கள் 10 பேரும் ஒரே நபிமொழியில் கூறப்பட்டவர்கள். அத்துடன் பிலால
ஸாபித் இப்னு கைஸ்
அப்துல்லாஹ் இப்னு ஸலாம
இதில் மாபெரும் ஐந்து குடும்பத்தினர் உள்வாங்கப்படுவர். அவர்கள் அலியின் குடும்பத்தினர், ஜஃபரின் குடும்பத்தினர், அகீலின் குடும்பத்தினர், அப்பாஸின் குடும்பத்தினர், ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிபின் பிள்ளைகள். இவர்கள் ஸகாத் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இவர்களின் சிறப்பு பற்றி நபி அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : இஸ்மாயில் அவர்களின் சந்ததியிலிருந்து கினானா கோத்திரத்தை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். கினானாவிலிருந்து குரைஷிகளையும், குரைஷிகளிலிருந்து பனூ ஹாஷிமையும் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிமிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான
என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நீங்கள் அல்லாஹ்வுக்காகவும், எனது குடும்பத்தினருக்காகவும் உங்களை விரும்பாதவரை உங்களின் உள்ளத்தில் ஈமான் நுழைந்திடாத
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நீங்கள் அல்லாஹ்வுக்காகவும், எனது குடும்பத்தினருக்காகவும் உங்களை விரும்பாதவரை உங்களின் உள்ளத்தில் ஈமான் நுழைந்திடாத
இவை தவிர நபியவர்களின் மனைவியவரும் இப்பட்டியலில் அடங்குவர். அவர்களை அல்லாஹ் தனது நபிக்காகத் தெரிவு செய்து, ஈருலகிலும் அவருடைய மனைவியர்களாக ஆக்கியது மட்டுமின்றி, முஃமின்களின் அன்னையர் எனப் பட்டமும் சூட்டியுள்ளான். அவர்களின் பெயர்கள் வருமாறு: ஹதீஜா பின் ஹுவைலித், ஆஇஷா பின்த் அபூபக்கர், ஸவ்தா பின்த் ஸம்ஆ, ஹப்ஸா பின்த் உமர், உம்மு ஸலமா, உம்மு ஹபீபா பின்த் அபீ ஸுப்யான், ஸபிய்யா பின்த் ஹுயை, ஸைனப் பின்த் ஜஹ்ஸ், ஜுவைரிய்யா, மைமூனா, ஸைனப் பின் ஹுஸைமா -ரழியல்லாஹு அன்ஹுன்ன-. இவர்கள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: “(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஸகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.”
1. அவர்களை விரும்பி, பொருந்திக்கொண்டு, அவர்களுக்காக பாவமன்னிப்பு கோரி, அவர்களைப் புகழ்ந்திட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றன