menu-icon menu-icon
நம்பிக்கைகள்

அல்லாஹ் இருக்கிறான் என்பதை உறுதியாகவேநம்பவேண்டும். அவன் அனைத்தினதும் இரட்சகன், வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அவன் மாத்திரமே, பூரணத்துவம் மிக்க பண்புகளால் வர்ணிக்கப்படுபவன். குறைகள் உள்ள பண்புகளை விட்டும் பரிசுத்தமானவன்.

2 Related by Muslim, 8.

அல்லாஹ்வின் இருப்பை நம்பிக்

அல்லாஹ்வின் இருப்பு என்பது யதார்த்தமானதே. அல்லாஹ் கூறுகிறான் : “இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் யதார்த்தமான (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.”

(அல்குர்ஆன் 22:62)
 

அல்லாஹ்வின் இருப்பில் சந்தேகம் கொள்வது மறுக்கப்படவேண்டிய விடயமாகும். அல்லாஹ் கூறுகிறான் : “அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்;”

(அல்குர்ஆன் 14:10)
 

அல்லாஹ்வின் இருப்பை மறுப்பவர் இறைநிராகரிப்பாளராகவும், பெருமைக்காரராகவும், தனக்குத் தானே அநியாயம் செய்துகொண்டவராகவுமே இருப்பார். அல்லாஹ் கூறுகிறான் : “(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.”

(அல்குர்ஆன் 17:102)
 
2 Related by Muslim, 8.

மேலும், “அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான். அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)”

என்று கூறினார். தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி: “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான். (அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார். (அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்”

எனக் கூறினான். (அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார். (அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.”

(அல்குர்ஆன் 26:23-29)
 

பல விஷயங்கள் கடவுளுடைய நிரூபணங்களை நிரூபிக்கின்றன
இருப்பு, உட்பட:

01

1. இயல்ப

அல்லாஹ் கூறுகிறான் : “ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.”

(அல்குர்ஆன் 30:30)
 

நபி அவர்கள் கூறினார்கள் : “எல்லாக் குழந்தைகளுமே (சத்தியத்தை ஏற்கும்) இயல்பிலேயே பிறக்கின்றன. பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்”, முஸ்லிம் நூலின் ஓர் அறிவிப்பில், “எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்திலே பிறக்கின்றன” என இடம்பெற்றுள்ளது. வேறொரு அறிவிப்பில், “இந்த (இயற்கை) மார்க்கத்தில்தான் பிறக்கின்றன; அதைப் பற்றி (அதாவது தனது நிலையைப் பற்றி) அதன் நாவு தெளிவுபடுத்தும்வரை” என இடம்பெற்றுள்ளது. இன்னொரு அறிவிப்பில், “பிறக்கின்ற எந்தக் குழந்தையும் இந்த இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன; அதன் நாவு அதைப் பற்றி பேசும்வரை” எனக் காணப்படுகிறத

( அறிவிப்பவர)
 


அனைத்துப் படைப்பினங்களும் அவர்களின் இயல்பு நிலைச் சிந்தனையில் மாற்றம் ஏற்படும் வரை அல்லாஹ்வின் இருப்பை உறுதி செய்யும் வண்ணம் தமது உள்ளத்தில் அவனை நம்பிக்கை கொண்டுள்ளன. அல்லாஹ் ஹதீஸுல் குத்ஸியில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : “நான் என் அடியார்களை இயல்பான மார்க்கத்திலே படைத்துள்ளேன். ஷைத்தான் அவர்களிடம் சென்று, அவர்களின் இம் மார்க்கத்தை விட்டும் அவர்களை திசை திருப்பிவிட்டான்”

()அறிவிப்பவர
 

இவ் இயல்பு நிலை சந்தேகங்களாலும், மோகங்களாலும் மாசுபடுகின்றது, எனினும் கஷ்டங்கள், துன்பங்கள் போன்றன ஏற்படும் வேளையில் அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து விட்டு இயல்பு நிலைக்கே அது திரும்புகின்றது. அல்லாஹ் கூறுகிறான் : “மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விட்டால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.”

(அல்குர்ஆன் 29:65)
 

02

2. தெளிவான புத்திக்கூர்ம

இப் புத்திக்கூர்மையனது சந்தேகங்கள், மோகங்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது. இதன் மூலம் படைப்பினங்களுக்கு கட்டாயம் ஓர் படைப்பாளன் இருக்க வேண்டும் என்பதை அறிய முடியும். ஏனெனில் எந்த ஒன்றும் படைப்பாளன் இன்றி திடீரென தோற்றம் பெறுவதில்லை. அவ்வாறு தோற்றம் பெறவும் முடியாது. இல்லாமல் இருக்கும் ஒன்று இருக்கும் ஒன்றை உருவாக்கிட முடியாது. எனவே படைப்பாளன் என்பவன் நிச்சயம் இருந்தே ஆக வேண்டும். அவன் தான் அல்லாஹ்.

ஜுபைர் இப்னு முத்யிம்  பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விடயமாக நபி  அவர்களிடம் வந்த போது, அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் ( வது) அத்தியாயத்தை ஓதக்கேட்டார். ‘(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கிறார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்களுடைய இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள் தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?’ எனும் இந்த

(திருக்குர்ஆன் 52:35-37ஆகிய)
 


வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது எனவும் குறிப்பிட இச்சம்பவம் அவரது உள்ளத்தில் முதன் முதலாக இறை நம்பிக்கை ஏற்பட காரணமாக அமைந்தது.

(முஹம்மத்)
 

தெளிவான புத்திக்கூர்மையை ஜாஹிலிய்யாக் கால பிரச்சாரகரான கஸ் இப்னு ஸாஇதா அல்அயாதி என்பவர் தனது உரையில் பின்வருமாறு பிரதிபலிக்கிறார். “குதிரையின் மலம் குதிரை இருப்பதை உறுதிப்படுத்திறது. பூமியில் உள்ள கால்தடம் ஒருவர் நடந்துசென்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது. உயர்ந்த வானமும், விரிந்த பூமியும் அதனை கட்டமைத்த திறமையான ஒருவன் இருப்பதை உறுதிப்படுத்தவில்லையா?”.

03

3. புலன்கள்.

அல்லாஹ்வின் இருப்பை எமது ஐம்புலன்கள் ஊடாகவும் அறிந்திட முடியும். அல்லாஹ் கூறுகிறான “நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்” இவ்வாறான அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நபிமார்கள் நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள், நல்லடியார்களின் கராமத்துக்கள், பிரார்த்தனை புரிந்தவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படல் போன்ற பல விதங்களில் எமது புலன்களால் அறிந்திட முடிகிறது.

(அல்குர்ஆன் 41:53)
 

தனது தூதர் நூஹ்  அவர்கள் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் : “அப்போது அவர்; “நிச்சயமாக நான் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார். ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்கவைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக்கொண்டோம். எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.”

(அல்குர்ஆன் 54:10-14)
 

தனது தூதர் மூஸா அவர்கள் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் : “உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம். மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம். பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.”

(அல்குர்ஆன் 26:63-67)
 

தனது தூதர் ஈஸா அவர்கள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : “இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டஇறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).”

(அல்குர்ஆன் 03:49)
 

நபி அவர்கள் வாழ்விலும் இவ்வாறான பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஒன்றை அனஸ் இப்னு மாலிக்  அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ‘தாருல்களா’ எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி  அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, ‘இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தைய�ோ பிரிந்து கிடக்கும் மேகங்களைய�ோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ‘ஸல்ஃ’ என்னும மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி  அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ‘ இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். உடன் நபி  அவர்கள் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

(அல்முப்ஹம)
 

பொதுப்படையான அத்தாட்சிகள் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் : “கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.”

(அல்குர்ஆன் 27:62)
 

எனவே நபிமார்களின் அற்புதங்கள், பிரார்த்தனையின் பலன்கள், துன்பத்திலிருப்பவருக்கான உதவி போன்ற அனைத்தும் அவற்றை வழங்குகின்ற ஒருவன் இருக்கிறான் என்பதை எமது புலன்கள் ஊடாக தெளிவுபடுத்துகின்றன.

04

4. ஷரீஆ (அல்குர்ஆனும், ஸுன்னாவும்).

ஷரீஆ என்பது அல்குர்ஆனையும், ஸஹீஹான ஸுன்னாவையும் உள்ளடக்கிய அறிவாகும். இதனூடாகவும் அல்லாஹ்வின் இருப்பை எம்மால் அறிந்திட முடியும். ஷரீஆ யதார்த்தமானது என பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் எமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ் கூறுகிறான் : “அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.”

(அல்குர்ஆன் 04:82)
 

மேலும், “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.”

(அல்குர்ஆன் 04:174).
 

மேலும், “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.”

(அல்குர்ஆன் 10:57)
 

மேலும், “அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.”

(அல்குர்ஆன் 29:51)
 

யதார்த்தமான மறைவான செய்திகளையும், சரியான கொள்கைகளையும், நீதமான மார்க்கத்தையும், சீரான நற்குணங்களையும் உள்ளடக்கிய இந்த ஷரீஆ அல்லாஹ்விடம் இருந்து தான் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அல்குர்ஆன் வசனங்களும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. இது எவ்விதத்திலும் படைப்பினங்கள் மூலம் உருவாகி இருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. எனவே இதில் குறிப்பிடப்படும் அல்லாஹ்வின் இருப்பு பற்றிய அனைத்து செய்திகளும் யதார்த்தமானதே.






அ. காலவியலாளர்

கேட்பதற்கு புதுமையான சொல்லாக இருப்பினும் இவர்கள் உலகம் பழையது, அது நிரந்தரமானது எனும் தத்துவத்தைப் பேசக்கூடியவர்கள். தற்காலத்தில் இவர்களை புது நாத்திகவாதிகள் எனவும் பலர் அழைக்கின்றனர்.

காலவியலாளர்களுக்கு ஏன் இப் பெயர் வந்தது? அவர்கள் என்ன கூறுவார்கள்? என்பதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான், “மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.”

”(அல்குர்ஆன் 45:24)
 

இவர்களின் கருத்துப்படி ‘இவ்வுலகம் தானாக இயங்கிக்கொண்டிருக்கிறது. உலகம் நிரந்தரமானது. ஆனால் இங்குள்ளவை நிரந்தரமற்றவை. மனிதர்கள் உட்பட அனைத்தும் வாழ்ந்துவிட்டு இறந்துவிடுவர். திரும்பவும் பல தசாப்தங்களுக்குப் பின்னர் பிறந்து, வாழ்ந்து, மீண்டும் மடிந்துவிடுவர். இவர்களை காலம் தான் அழிக்கிறது. ஆக படைப்பாளன் என்று எவரும் கிடையாது. அனைத்தும் தானாக உருவாகி, தானாகவே அழிகின்றன’ என பலவாரான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இதனை சார்பிற்தோற்றக்கொள்கை எனவும் அழைக்கின்றன

அல்லாஹ் இவர்களைப் பார்த்து, “அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது” எனக் கூறுகிறான். ஏனெனில் இவர்கள் தெளிவான புத்திக்கூர்மையுடனோ, புலனறிவினாலோ, இயல்பான சிந்தனையினாலோ, ஆதாரங்களின் அடிப்படையிலோ பேசாமல் தமக்குத் தோன்றுகிறவாரெல்லாம் பேசுகின்றனர். படைப்பாளன் இன்றி எவ்வாறு படைப்புக்கள் இயங்க முடியும் எனும் சாதாரன நிலையில் கூட தமது சிந்தனையைசெலுத்தாமல்வேறு எங்கோ எல்லாம் திசை மாறி சிந்திக்கின்றனர். “அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை”

ஆ. இயற்கையாளர்

இவர்கள் இவ்வுலகம் இயற்கையாகவே தோன்றியது என்கின்றனர். இவ் உலகிலுள்ள அனைத்து தாவரங்களும், விலங்குகளும், தின்மங்களும், திரவங்களும் தன்னையும், தனது செயற்பாடுகளையும் தாமே உருவாக்கிக்கொண்டதாக வாதிடுகின்றனர். ஒரு பொருள் ஒரே நேரத்தில் எவ்வாறு தானாக உருவாகும் படைப்பாகவும், இன்னொன்றை உருவாக்கும் படைப்பாளியாகவும் இருக்க முடியும்?

ஒரு வாதத்திற்கு இயற்கை தான் அனைத்தையும் உருவாக்கியது என வைத்துக்கொண்டாலும் புலன்களோ, உணர்வுகளோ அற்ற ஜடப் பொருட்கள் எவ்வாறு தம்மை விடவும் புலன்களால் பார்த்து, கேட்டு, மொழிந்து, உணர்வுகளால் கவலை, சந்தோசம், துன்பம், துயரம் போன்றவற்றை வெளிக்காட்டும் இன்னோர் படைப்பை படைத்திட முடியும்? சக்தியைப் பற்றியே அறிவு இல்லாத ஒன்றால் பூரணமான சக்திமிக்க ஒன்றை உருவாக்கிட முடியாது. அல்லாஹ் கூறுகிறான் : “அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?”

(அல்குர்ஆன் 52:35)
 

உ. வரலாறு நெடுகிலும் தோன்றிய மனிதக் கடவுள்

இம்மனிதர்கள் இறைவன் என்ற ஒருவனை மறுத்து, தானே அனைத்திற்கும் இறைவன் என வாதிட்டவர்களாவர். ஒவ்வொரு சமூகத்திலும், பிரதேசங்களிலும், நாகரீக வளர்ச்சிக் கட்டங்களிலும் இவ்வாறான மனிதக் கடவுள்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் பற்றி பல வரலாற்றுக்குறிப்புக்கள் இருப்பினும் அல்குர்ஆன் அவர்களில் முக்கியமான இருவர் பற்றிக் குறிப்பிடுகின்றத

1. பிர்அவ்ன

அல்லாஹ் கூறுகிறான் : “அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.”

(அல்குர்ஆன் 26:23).
 

““நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.”

(அல்குர்ஆன் 79:24)
 

“என்னைத்தவிர உங்களுக்கு வணங்கப்படத் தகுதியான வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை.”

(அல்குர்ஆன் 28:38)
 

மேலும், “ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.)” (அல்குர்ஆன் 27:88)

மேலும், “அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.”

(அல்குர்ஆன் 65:12)
 

“நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்”

(அல்குர்ஆன் 26:29)
 

2. நும்ரூத்.

அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.”

(அல்குர்ஆன் 02:258)
 

இவர்கள் அனைவரும் தான் ஓர் படைப்பு என்பதையும், தனது தேவைகளுக்கு பிறரையே நாட வேண்டியுள்ளது என்பதையும் மறந்து வாழ்ந்தவர்கள். இறைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒரு துளி கூட பெற்றிடாதவர்கள். சமூக கௌரவமும், பதவியும் கையில் உள்ளதால் தன்னை உயர்த்த இறைவனாக காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் நிலைபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

அல்லாஹ் கூறுகிறான் : “அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.” இதனால் அவர்களுக்கென ஓர் இருப்புமில்லாமல், நிரந்தர வாழ்வுமில்லாமல் குறிக்கப்பட்ட நேரம் வந்த போது அழிந்துவிட

(அல்குர்ஆன் 27:14)
 

அல்லாஹ்வின் பரிபாலணத்தை நம்பிக்கை க

அல்லாஹ் தனித்தவன், அவன் அனைத்தினதும் இரட்சகன், படைப்பாளன், அரசன், ஆணையிடுபவன் என உறுதியாக நம்பிக்கைகொள்ளவேண்டும். சுருக்கமாகக் கூறின், அல்லாஹ்வின் செயற்பாடுகளில் அவனை ஒருமைப்படுத்துதல். இரட்சகன் (ரப்புன்) எனும் வார்த்தை எஜமான், அரசன், இப்பிரபஞ்சத்தின் அனைத்தையும் தனது அருளால் பராமரிப்பவன் எனும் கருத்துக்களில் பயன்படுத்தப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: “(இதற்கு ஃபிர்அவ்ன்) “மூஸாவே! உங்களிருவருடைய இரட்சகன் யார்?” என்று கேட்டான். “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.”

(அல்குர்ஆன் 20:49,50)
 

அல்லாஹ்வின் பரிபாலணம் பின்வரும் மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்குகிறது. அவை வருமாற

seegogImg

1. படைப்பு

அல்லாஹ்வே அனைத்தினதும் படைப்பாளன். அவனைத் தவிர இவ்வுலகில் இருக்கும் அனைத்துமே படைப்புக்கள். அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.” (அல்குர்ஆன் 39:62), “அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.”

(அல்குர்ஆன் 25:02)
 

அல்லாஹ்வன்றி வேறொருவருக்குப் படைப்பாளன் என்று பயன்படுத்தப்பட்டால் அது ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் கட்டமைப்பு, வடிவமைப்பு, மெருகூட்டல், பெறுமதி போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயன்றி இல்லாத ஒன்றை உருவாக்கும் நோக்கிலல்ல என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.”

(அல்குர்ஆன் 23:14)
 
seegogImg
70 Related by Muslim, 1851.

2. ஆட்சி.

அல்லாஹ்வே அனைத்தினதும் அரசன். அவனைத் தவிர இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவனால் ஆழப்படுபவைகள். அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?”

(அல்குர்ஆன் 02:107)
 

“வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.”

(அல்குர்ஆன் 03:189)
 

), “(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாய�ோ அவருக்கு ஆட்சிய கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடிய�ோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவுபடுத்தவும் செய்கிறாய்” “(தன்) ஆட்சியில் தனக்குப் பங்காளி எவரும் இல்லாதவன்”

(17: 111)
 
70 Related by Muslim, 1851.

“அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.”

(அல்குர்ஆன் 35:13)
 

அல்லாஹ்வன்றி வோறொருவனுக்கு அரசன் எனப் பயன்படுத்தப்பட்டால் அது இவ்வுலகில் நாட்டையும், மக்களையும் ஆட்சிசெய்து கொண்டிருப்போரின் நிரந்தரமற்ற, பலமற்ற, பூரணத்துவமற்ற ஆட்சிமுறையைக் குறிக்கும். உதாரணமாகப் பின்வரும் இறைவசனத்தைக் கூறலாம் : “என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்;” (அல்குர்ஆன் 40:29). “அல்லது உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைகள் ”

(அல்குர்ஆன் 4:03)
 

ஆனால் அல்லாஹ்வின் ஆட்சிய�ோ நிரந்தரமான, பலமான, இவ்வுலகிற்கும், மறுமைக்கும் சொந்தமான ஆட்சியாகும். அவனின் அதிகாரம் இப்பிரபஞ்சம் முழுக்க பரவக்கிடக்கிறது. பூரணத்துவமானது. அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.”

(அல்குர்ஆன் 19:40)
 

கடவுள் கட்டளையிடும் அதிகாரத்தில் கடவுள் இருக்கிறார்

01

3. கட்டளை.

இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் கட்டளையிடுபவன் அல்லாஹ் மாத்திரமே. அவனைத் தவிர மற்ற அனைத்தும் அவனின் கட்டளைக்கு செவிசாய்த்து கட்டுப்படுபவைகளே. அல்லாஹ் கூறுகிறான் : ““நிச்சயமாக கட்டளை முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக!”

(அல்குர்ஆன் 03:154),
 

“படைப்பும், கட்டளையிடுதலும் அவனுக்கே சொந்தமல்லவா?”

(அல்குர்ஆன் 07:54)
 

“ஆணை பிரப்பிக்கப்படும். (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்) கொண்டுவரப்படும்.”

(அல்குர்ஆன் 02:210)
 

தனது நபியைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான் : “(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் கட்டளையிடுதல் இல்லை.”

(அல்குர்ஆன் 03:128)
 

நபியவர்களுக்கே இப்பிரபஞ்சத்தையும், அதன் படைப்புக்களையும் கட்டளை பிரப்பித்து, தன் கட்டுப்பாட்டில் வைத்திட முடியாது எனில் மற்ற மனிதர்களின் நிலை என்ன? அல்லாஹ் கூறுகிறான் : “(இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) ஆணையிடும் அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்”

(அல்குர்ஆன் 30:04)
 

அவனன்றி வேறொருவனுடைய கட்டளை எனப் பயன்படுத்தப்பட்டால் அது இவ்வுலகில் அதிகாரத்தில் இருப்போரின் குறுகிய கட்டளைகளைக் குறிக்கும், அவையும் அல்லாஹ்வின் நாட்டத்தில்தான் தங்கியுள்ளன. அவன் நாடினால் அவற்றை அமுல்படுத்தச் செய்திடுவான், நாடினால் ரத்துசெய்திடுவான். அல்லாஹ் கூறுகிறான் : “அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளைய�ோ நேர்மையானதாக இருக்கவில்லை.”

(அல்குர்ஆன் 11:97)
 
02

அல்லாஹ்வின் கட்டளை பிரபஞ்சவியல், சட்டவியல் எனும் இரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. பிரபஞ்சவியல் கட்டளையானது நிச்சயம் அமுலாக்கப்பட்டே தீரும். அதில் ஒரு துளியும் சந்தேகம் கிடையாது. இது அல்லாஹ்வின் நாட்டத்தோடு தொடர்புபட்டுள்ளது. இதற்கு உதாரணமாக பிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்ச அழிவு போன்றவற்றைக் குறிப்பிடலாம். அல்லாஹ் கூறுகிறான் : “எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.”

(அல்குர்ஆன் 36:82)
 

சட்டவியல் கட்டளையானது சிலவேளை நிகழலாம், சில வேளை நிகழாமலும் போகலாம். இது அல்லாஹ்வின் விருப்பத்தோடு தொடர்புபட்டது. இத்தகைய கட்டளைகள் யாவும் மனித வாழ்வுக்குப் பொருத்தமான விடயங்களில் நிகழ்த்தப்படுபவைகளாகும். இதற்கு உதாரணமாக நேர்வழி, வசதிவாய்ப்புக்கள், சோதனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதுவும் பொதுவாக அல்லாஹ்வின் நாட்டத்திலே சேரும். அல்லாஹ் கூறுகிறான் : “உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.”

(அல்குர்ஆன் 81:28,29)
 

அல்லாஹ்வின் பரிபாலணத்தோடு தொடர்புபட்ட அவனின் ஏனைய பண்புகள் யாவும் படைப்பு, ஆட்சி, கட்டளை முதலிய மூன்று அம்சங்களுக்குள்ளே அடங்கிவிடும். உணவளித்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல், மழை பொழிய வைத்தல், பயிர்பச்சைகளை முளைக்கச் செய்தல், காற்றை அனுப்புதல், கப்பலை கடலில் மிதக்க வைத்தல், இரவு பகலை மாறிமாறி வரச் செய்தல், கருவுரச் செய்தல், பிரசவத்தை ஏற்படுத்தல், ஆரோக்கியம், நோய், கண்ணியம், இழிவு போன்ற அனைத்துமே மேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களுக்குள்ளும் அடங்கிவிடுகின்றன.

இத்தகைய அல்லாஹ்வின் பரிபாலணத்தை நம்பிக்கை கொள்வதற்கு மனிதனின் இயல்பு நிலை இடமளிக்கும். அவனின் சிந்தனைத் திறன் அவற்றை ஏற்றுக்கொள்ளும். இவ்வுலகில் தனது புலன்களால் அவற்றை உணர்ந்திட முடியும். அல்குர்ஆன், ஸுன்னாவை ஆய்வு செய்யும் போது அவற்றிலும் ஏராளமாக படித்து அறிந்திட முடியும். இவ்வாறான அல்லாஹ்வின் பரிபாலணம் பற்றி ஏராளமான அல்குர்ஆன் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு,

அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.”

(அல்குர்ஆன் 02:164)
 

“(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடிய�ோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.”

(அல்குர்ஆன் 03:27)
 

03

“நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துபவன்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்? அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் - அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஸைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.”

(அல்குர்ஆன் 06:95-99)
 

“(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது உயர்ந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியேநடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.”

(அல்குர்ஆன் 13:02-04)
 

“அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்கமேலானவன். அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான். கால்நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான். அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன

அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஸைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூறும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் அவன் ஆறுகளையும், நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக பாதைகளையும் (அமைத்தான்). (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா? இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடைய�ோனாகவும் இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 16:03-18)
 

“நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகானபடைப்பாளன். பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்கவைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடைய�ோம். அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை, திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணையை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது). நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.”

(அல்குர்ஆன் 23:12-22)
 

“(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது. மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்) களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 24:43-45)
 

“(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர்பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம். பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம். அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம். இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம். அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.

04

மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம். ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.”

(அல்குர்ஆன் 25:45-54)
 

“ஆகவே, (முஃமின்களே!) நீங்கள் மாலையி(லாகும் பொழுதி)லும், நீங்கள் காலையி(லாகும் பொழுதி)லும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள். இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்). அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள். மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;

உங்களுக்கிடையே உகப்பையும், அன்பையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமிய அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள். வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன. அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்தபண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”

(30: 17–27) (அல்குர்ஆன் 30:17-27)
 

“அளவற்ற அருளாளன், இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. நட்சத்திரங்களும், மரங்களும் அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். இன்னும், பூமியை -

படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்- தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?”

(அல்குர்ஆன் 55:01- 25)
 

“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம். மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். மேலும், பகலை உங்கள் வாழ்க்கையாக (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலமாக) ஆக்கினோம். உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம். ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம். அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம். அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).”

(அல்குர்ஆன் 78:06-16)
 

“உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான். இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான். அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).”

(அல்குர்ஆன் 79:27-33)
 

"Let man reflect on the food he eats: how We pour down the rain in torrents, then cleave the earth in fissures; how We bring forth the grains, the grapes, and the fresh vegetation, the olive “எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - அடர்ந்த தோட்டங்களையும், பழங்களையும், தீவனங்களையும்- (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,” and the palm, the dense-treed gardens, the fruit-trees and the green pastures, for you and your cattle to delight in".

(அல்குர்ஆன் 80:24-32)
 

அல்லாஹ்வே படைப்பாளன், அனைத்திற்கும் அரசன், ஆணைபிறப்பிப்பவன் என அனைத்து மக்களும் அவனின் பரிபாலணத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறே அரேபிய சமூகத்தில் இருந்த இணைவைப்பாளர்களும் ஏற்றிருந்தனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான ““நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக! “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக! “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக. “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக! “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக. அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.”

(அல்குர்ஆன் 23:84-89)
 

மேலும், “(நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.”

(அல்குர்ஆன் 43:09)
 

ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி சட்டவிரோதமானது என்பதாகும்

அதாவது ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி

shape

இத்தகைய பரிபாலணக் கோட்பாட்டை தவறுதலாக புரிந்து கொண்டதன் விளைவாக ஒரு சில குழுக்களே வழி தவறிச் சென்றன. அவை வருமாறு:

1. நெருப்பு வணங்கிகள் (மஜூஸிகள்): இவ்வுலகிற்கு நல்லவற்றைப் படைப்பதற்கு ஒளிக் கடவுளும், தீயவற்றைப் படைப்பதற்கு இருள் கடவுளும் என இரு கடவுள்களே இருக்கின்றனர் என்பதே இவர்களின் நம்பிக்கை. ஒளிக்கடவுளே சிறந்தவர் என்பதில் அவர்கள் ஒருமித்திருந்தாலும், இருள் கடவுள் விடயத்தில் அது படைக்கப்படாத ஆதியானதா அல்லது படைக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டதா என்பதில் கருத்து வேறுபாடு பட்டுள்ளனர்.

2. கிறிஸ்தவர்கள். இவர்களின் இறையியலின்படி ஒரே இறைவன் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருக்கிறார். ஒரே கடவுளின் மூன்று ஆட்கள் எனும் இவ் இயல்பே திரித்துவம் (தஸ்லீஸ்) என அழைக்கப்படுகிறது. எனினும் இவர்கள், படைத்துப் பரிபாலிக்கும் கடவுள்கள் வெவ்வேறான மூன்றுபேர் என்று கூறவில்லை. பிரபஞ்சத்தைப் படைத்தவன் ஒருவன் என்பதில் அவர்களிடையே மாற்றுக் கருத்தில்லை.

3. அரேபிய இணைவைப்பாளர்கள். இறைவனின் பரிபாலணம் என்பதை சீட்டுக்குழுக்கலை வைத்து தீர்மாணிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. தாம் வணங்கிய கடவுள் நல்லதை செய்யவும், தீயதை செய்யவும், உலகை ஆழவும் சக்திபெறுவார் என நம்பிய அவர்கள் தாம் ஒரு காரியத்தை செய்ய முயலும் போது சீட்டுக்குழுக்கிப் போடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். மூன்று சீட்டை எடுத்து, ஒன்றில் செய் என்றும், இரண்டாவதில்செய்யாதே என்றும் எழுதி, மூன்றாவதைவெறுமையாக விட்டுவிடுவார்கள். குழுக்கலில் செய் என்பது விழுந்தால் தாம் செய்யப்போகும் காரியத்தை செய்வார்கள். செய்யாதே என விழுந்தால் விட்டுவிடுவார்கள். வெறும் சீட்டு விழுந்தால் திரும்பவும் குழுக்குவார்கள். எனவே பரிபாலணம் என்பது சீட்டுக்குழுக்களில் உள்ளது என்பதே இவர்களின் கோட்பாடாகும்.

4. விதியை மறுப்பவர்கள். ஓர் மனிதனுக்கு தனது செயலை தானே படைத்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இதில் மனிதனின் பரிபாலணத்தை மனிதனே கையில் எடுத்துள்ளான். கடவுளுக்கும் மனிதனின் செயற்பாடுகளுக்கும் எவ்வித சம்பந்தமும், தொடர்பும் இல்லை என்பது இவர்களின் வாதமாகும்.

மேற்குறிப்பிடப்பட்டவர்கள் இயல்புநிலை, தெளிவான புத்திக்கூர்மை, உணர்வு, இறைவனின் படைப்பு, ஆட்சி, கட்டளை போன்றவற்றை தெளிவாகப் போதிக்கும் அல்குர்ஆன் வசனங்கள் போன்றவற்றை திறன்படபயன்படுத்தினால்பரிபாலணத்தில் இத்தகைய கருத்துவேறுபாடுகளையும், வழிகெட்ட சிந்தனைகளையும் சந்திக்கமாட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.”

(அல்குர்ஆன் 23:91)
 

உண்மையான இறைவன் படைப்பாளனாகவும், தான் விரும்பியதை செய்பவனாகவுமே இருக்கவேண்டும். அவனுடன் இன்னொரு கடவுளும் இருந்தால் இவற்றில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இருந்த போதிலும் பின்வரும் இரு சந்தர்ப்பத்தில் ஒன்று நடைபெறும் என்பது நிதர்சன உண்மையாகும். அவை:

ஒவ்வொரு கடவுளும் தான் விரும்பியதை, விரும்பிய வடிவில் படைப்பார்கள். ஒவ்வொருவரும் தனக்கென ஓர் அதிகார வட்டத்தை உருவாக்கிக் கொள்வர். இவ்வாறு நடைபெறுவதை உலக நியதியும், ஒழுங்கும் இடம்கொடுத்ததில்லை.

அக்கடவுள்களுக்கு மத்தியில் அதிகாரப் போட்டி நிலவும். ஒருவர் உடலை அசைக்க விரும்புவார். மற்றவர் அசைக்கவிடாமல் செய்வார். ஒருவர் சிலவற்றை உயிர்ப்பிக்க வேண்டுமென நாடுவார். மற்றவர் மரணிக்கவைக்க நாடுவார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒன்றோ அனைவரினதும் நாட்டம் நிறைவேறும், அல்லது ஒருவரின் நாட்டம் மாத்திரமே நிறைவேறும். அல்லது இருவரினதுமே நிறைவேறாமல் போய்விடும். தமது நாட்டத்தை நிறைவேற்றுவதில் யார் உயர்ந்தவர் என அவர்களுக்கு மத்தியிலே சச்சரவுகள் நிகழும். இறுதியில் ஒருவரின் நாட்டமே நிறைவேற, மற்றவர்களின் நாட்டங்கள் நிறைவேறாமல்போய்விடும். இப்போது யாரின் ஆதிக்கம் மற்றவர்களை விடவும் மிகைத்துவிடுமோ அவரே சக்திமிக்க கடவுளாக கருதப்படுவார். மற்றவர்கள் கடவுள் தன்மைக்கு தகுதியற்றவர்கள் எனும் நிலைக்கு சென்றுவிடுவர்.

seegogImg

அல்லாஹ்வின் இறைமையை நம்பிக்கை கொள்ளல்


வணங்கப்படுவதற்குத் தகுதியான, உண்மையான ஒரே இறைவன் அல்லாஹ் மாத்திரமே என உறுதியாக நம்பிக்கை கொள்வதை இது குறித்து நிற்கிறது.

“இலாஹ்” எனும் சொல் வணங்கப்படக்கூடியவன் எனும் அர்த்தத்தை வழங்குகிறது. அன்பு, கண்ணியம் என்பவற்றால் உள்ளம் இறைவனுக்கு வணக்கத்தைச் செலுத்துகிறது. உன்மையில் வணக்கம் என்பது பூரணமான தாழ்வு, அடிபணிவு, கண்ணியம் போன்றவற்றால் பூரணமான அன்பை இறைவனுக்கு வெளிப்படுத்துவதேயாகும். இவ்வாறான பூரணத்துவமிக்க வணக்கத்தை ஒரே இறைவனைத் தவிர வேறு யாருக்கும் செலுத்த முடியாது என்பதற்கு அல்லாஹ்வும், படைப்பினங்களும் சாட்சியாளர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடைய�ோரும் (இவ்வாறேசாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.”

(அல்குர்ஆன் 03:18)
 

மேலும் “மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடைய�ோன்.”

(அல்குர்ஆன் 02:168)
 
seegogImg

தன்னை மாத்திரம் வணங்குவதற்காகவே எவ்வித எதிர்பார்ப்பும், தேவையும் இன்றி மனிதர்களையும், ஜின்களையும் அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான் : “இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.”

(அல்குர்ஆன் 51:56-57)
 

அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும். அவனுக்கு இணையாக எவரையும் கூட்டுசேர்க்க கூடாது எனும் இவ் இறைச் செய்தியை மக்களுக்கு எத்திவைப்பதற்காக அல்லாஹ்வால்பல தூதர்கள் அனுப்பட்டனர். அல்லாஹ் கூறுகிறான் : “மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; (அவனல்லாது வணங்கப்படும்) தாகூத்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்;”

(அல்குர்ஆன் 16:36)
 

“அவர்கள்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை... என்று கூறினர்.”

(அல்குர்ஆன் 07:59,65,73,85)
 

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.”

(அல்குர்ஆன் 21:25)
 
seegogImg
seegogImg

1. உள்ளம்சார்ந்த வணக்கங்

அல்லாஹ்வைநேசம்கொள்ளல்: அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்”

(அல்குர்ஆன் 02:165)
 

அல்லாஹ்வின் தண்டனைகளுக்குப் பயப்படல்: அல்லாஹ் கூறுகிறான் : “ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.”

(அல்குர்ஆன் 03:175)
 

அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்த்திருத்தல்: “(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென எதிர்பார்க்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”

(அல்குர்ஆன் 18:110)
 

seegogImg

இம்மூன்று விடயங்களுமே உள்ளத்தால் செய்யவேண்டிய வணக்கங்களின் அடிப்படை அம்சங்களாகத் திகழ்கின்றன. இவை தவிர உள்ளத்தால் நிகழும் மற்ற அனைத்து வணக்கங்களும் இவற்றில் ஏதோ ஓர்பட்டியலில் இடம்பெற்றுவிடும். அல்லாஹ் கூறுகிறான் : இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும், அவனது அருளை எதிர்பார்த்தும், அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர்.”

(அல்குர்ஆன் 17:57)
 

இவற்றில் ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்றை நம்பிக்கை கொள்வது கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் மீதான பயத்தின் மூலம் மாத்திரம் அவனை வணங்குவது ஹரூரிய்யாக்கள் (ஹவாரிஜ்கள்) எனும் வழிகெட்ட கூட்டத்தில் எம்மைகொண்டு போய் சேர்த்துவிடும். அல்லாஹ்வின் மீதான எதிர்பார்ப்பில் மாத்திரம் அவனை வணங்க முற்படுவது எம்மை முர்ஜிஆக்கள் எனும் வழிகெட்ட கூட்டத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். அல்லாஹ்வின் மீதான நேசத்தினால் மாத்திரம் அவனை வணங்க முற்படுவது ஸின்தகீன்கள் எனும் வழிகெட்ட கூட்டத்தில் எம்மை கொண்டுபோய் சேர்த்துவிடும். எனவே அல்லாஹ்வை அவன் மீதான நேசம், எதிர்பார்ப்பு, பயம் முதலிய மூன்றினாலுமே வணங்கிட வேண்டும். அப்போதே சரியான முறையில் அல்ல ஒருமைப்படுத்திய கூட்டத்தில் எம்மால் இணைய முடியும உடல் சீராக இருப்பதற்கான அடிப்படை உள்ளம் சீராக இருப்பதே. நபி  அவர்கள் கூறினார்கள் : “அறிந்துகொள்ளுங்கள், உடம்பில் ஓர் சதைப்பிண்டம் உள்ளது. அது சீர்பெற்றுவிட்டால் உடல் முழுதும் சீர்பெற்றுவிடும். அது கெட்டுவிட்டால் உடல் முழுதும் கெட்டுவிடும். அறிந்துகொள்ளுங்கள், அதுவே உள்ளமாகும்”

(மான் இப்னு பஷீர்)
 
seegogImg
seegogImg

2. சொல்சார்ந்த வணக்கங்

பிரார்த்தனை: அல்லாஹ் கூறுகிறான் : “அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.”

(அல்குர்ஆன் 72:18)
 

பாதுகாவல்தேடுதல்: அல்லாஹ் கூறுகிறான் : “(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.”

(அல்குர்ஆன் 113:01)
 

“(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.”

(அல்குர்ஆன் 114:01)
 
seegogImg

உதவிதேடுதல்: அல்லாஹ் கூறுகிறான் : “(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.”

(அல்குர்ஆன் 08:09)
 

அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காகப் பிரய�ோகிக்கும் பொதுவான வாசகங்கள்: அல்லாஹ் கூறுகிறான் : “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.”

(அல்குர்ஆன் 33:41)
 

அல்குர்ஆன் ஓதுதல்: அல்லாஹ் கூறுகிறான் : “(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக”

(அல்குர்ஆன் 29:45)
 
seegogImg

பொதுவான நல்ல வார்த்தைகள்: "தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன"

(அல்குர்ஆன் 35:10)
 

இவை போன்று இன்னும் வார்த்தைகளினால் வெளிப்படும் வணக்கவழிபாடுகள் ஏராளம் இருக்கின்றன. இவை அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே அமைத்துக்கொள்ள வேண்டும்.

3. உடல்சார்ந்த வணக்கங்

தொழுகை: அல்லாஹ் கூறுகிறான் : "நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும"

(அல்குர்ஆன் 06:162)
 

அறுத்துப் பலியிடல்: அல்லாஹ் கூறுகிறான் : “எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.”

(அல்குர்ஆன் 108:02)
 
seegogImg
70 Related by Muslim, 1851.

கஃபாவை வளம் வருதல்: அல்லாஹ் கூறுகிறான் : "(அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை அவர்கள் “தவாஃபும்” செய்ய வேண்டும்."

(அல்குர்ஆன் 22:29)
 

பாதையிலுள்ள இடர்களை அகற்றுதல்: நபி  அவர்கள் இறைநம்பிக்கையின் படித்தரங்களைக் கூறும் போது : "அதன் கடைசிப் படித்தரமாக பாதையிலுள்ள இடர்களை அகற்றுவதைக் குறிப்பிட்டார்கள"

(அபூஹுரைரா)
 

இதுபோன்ற இன்னும் ஏராளமான வணக்கங்கள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அவனுக்காக மாத்திரமே நிறைவேற்றிட வேண்டும்.

(9: 60)
 

4. செல்வம்சார்ந்த வணக்கங்

அல்லாஹ்வுக்காக வேண்டி செலவிடப்படும் ஸகாத் வரி, தானதர்மம் (ஸதகா), மரணசாசனம் (வஸிய்யத்), அறக்கட்டளை (வக்ப்), நன்கொடைகள் போன்ற அனைத்தும் இப்பகுதிக்குள் உள்ளடங்கும். அல்லாஹ் கூறுகிறான்: "(ஸகாத் என்னும்) தானங்கள் யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையன"

(அல்குர்ஆன் 09:60)
 
seegogImg
70 Related by Muslim, 1851.
seegogImg

" “கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.” "

(அல்குர்ஆன் 09:99)
 

அவ்வாறே ஏழைகளுக்கு உணவளிப்பதும் இவ் வகையையே சாரும். அல்லாஹ் கூறுகிறான் : “மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனைய�ோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதைய�ோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).”

(அல்குர்ஆன் 76:08-09)
 

அல்லாஹ்வின் பரிபாலணத்தை ஏற்ற ஒருவர் அவனது இறைமைக் கோட்பாட்டையும் ஏற்றே ஆக வேண்டும்; அல்லாஹ்தான் படைப்பாளன், ஆட்சியாளன், அனைத்தையும் நிர்வகிப்பவன் என்று ஒருவன் ஏற்றால் அதன் விதிப்படி அனைத்து வணக்கங்களுக்கும் தகுதியானவன் அவன் மாத்திரமே என ஏற்ற

seegogImg

செயன்முறையில்கொண்டுவர வேண்டும். இதனை முஷ்ரிக்குகள் ஏற்றுக்கொள்வதற்காகப் பல ஆதாரங்களை முன்வைத்து நிறுவியுள்ளான். அவை வருமாறு:

அல்லாஹ் கூறுகிறான் : "மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடைய�ோராகலாம். அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்."

(அல்குர்ஆன் 02:21-22)
 

அல்லாஹ் கூறுகிறான் : “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?”

” (அல்குர்ஆன் 10:31- 32)
 
seegogImg
seegogImg

அல்லாஹ் கூறுகிறான் : "“(நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?” அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும், இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். "

கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன். முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள"

(அல்குர்ஆன் 27:59-64)
 
2 Related by Muslim, 8.

இவ்வாறு அல்லாஹ்வின் பரிபாலணத்தை ஏற்று, அதை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரித்தானதாக்கி, அவனை ஒருமைப்படுத்திய அதே மக்களுக்கு, அவனின் இறையியலையும் ஏற்று, அதை அவனுக்கு மாத்திரம் உரித்தாக்குவதற்கான சான்றுகளை அல்லாஹ் முன்வைக்கிறான். அவற்றை பரிபாணக் கோட்பாட்டினூடே அல்லாஹ் அணுகும் விதமானது இரண்டிற்கும் உரித்தான தனி ஒருவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை தெளிவாகவே எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவ்வாறே பரிபாலணக் கோட்பாட்டின் எவ்விதப் பண்புகளையும் பெற்றிராத இணைவைப்பாளர்களின் கடவுள்கோட்பாட்டை அல்லாஹ் பின்வருமாறு தகர்க்கிறான

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே! அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள். (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!. அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று. "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்"

(அல்குர்ஆன் 07:191-198)
 
2 Related by Muslim, 8.
seegogImg

அல்லாஹ் கூறுகிறான் : “(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.”

(அல்குர்ஆன் 25:03)
 

அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை. அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது; எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் “உங்கள் இறைவன் என்ன கூறினான்” என்று கேட்பார்கள். “உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்” என்று கூறுவார்கள்.”

(அல்குர்ஆன் 34:22-23)
 

மனிதனின் காலம்

01

4. இயல்பு நிலை மாற்றமடைதல் :

ஒருவன் இணைவைத்தலினால் முன்னர் இருந்த நிலையை விடவும் மோசமான நிலைக்கு உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாற்றமடைதலை இது குறிக்கிறது. அல்லாஹ் கூறுகிறான், "அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து, பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும், அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.”"

(அல்குர்ஆன் 22:31)
 

இத்தகைய பாவகரமான செயலை செய்தவனுக்கு அல்லாஹ் இவ் உலகிலும், மறுமையிலும் பின்வரும் தண்டனைகளை ஏற்படுத்தியுள்ளான். அவை வருமாறு:

1. பாவங்கள் மன்னிக்கப்படாமல் போதல்:

அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.”

(அல்குர்ஆன் 04:48)
 

2. சுவர்க்கம் தடைசெய்யப்பட்டு, நரகம் என்றென்றும் நிலையான இடமாக மாறுதல்:

அல்லாஹ் கூறுகிறான் : “எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.”

(அல்குர்ஆன் 05:72)
 

3. அனைத்து நற்செயல்களும் அழிந்துபோதல்:

அல்லாஹ் கூறுகிறான் : “அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்).”

(அல்குர்ஆன் 39:65)
 

4. உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் போதல்:

அல்லாஹ் கூறுகிறான் : “(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் கொலைசெய்யுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஸகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 09:05)
 

"‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என மக்கள் கூறும் வரை அவர்களுடன் போர்புரியுமாரு நான் ஏவப்பட்டுள்ளேன். அவ்வாறு கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார். தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர. அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது’ என்று நபி  அவர்கள் கூறினார்கள்."

(புகாரி )
 

இவ்வாறு அல்லாஹ்வை மாத்திரம் வணங்காமல் அவனுக்கு இணைவைத்தோர் பலர் இவ்வுலகில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களில் முக்கியமானசமூகத்தினர் பின்வருவ

1.சிலைவணக்கம் செய்வோர்:

இவர்கள் மரம், கல், மனிதன், ஜின், மலக்குமார்கள், கோல்கள், மிருகங்கள் என தமது குல, கோத்திர சம்பிரதாயங்கள் என மூதாதையர்களால் கூறப்பட்ட எண்ணற்வற்றை கடவுளாக நினைத்து, வணங்கி, வழிபடுகின்றனர். ஷைத்தான் இவர்களின் உள்ளத்தை பறிகொண்டுவிட்டான்.

2.கல்லறை வணங்கிகள்:

இவர்கள் கல்லறைகளிலும், மண்ணறைகளிலும் அடக்கம் செய்யப்பட்டோரிடம் பிரார்த்தனை புரிந்து, தமது தேவைகளை நிறைவேற்றுமாறு மண்டாடுகின்றனர். அவர்களுக்கென நேர்ச்சைகள் வைத்து, அறுத்துப் பலியிட்டு, நன்மைகளை ஈட்டித் தருமாறும், தீயவற்றிலிருந்து பாதுகாத்திடுமாறும் வேண்டுகின்றன

02

3. சூனியக்காரர்கள், ஜோஸியம் பார்ப்போர், குறிசொல்வோர்:

இவர்கள் தமக்கு செய்திகொண்டுவரும், அல்லது தம்மிடம் ஆஜராகும், அல்லது தமக்காக எல்லாவற்றையும் செய்து தரும் ஜின்களை வணங்கி, வழிபடுகின்றனர்.

வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு சமமாக பிறரை கூட்டு சேர்ப்பவர்களுக்கு, முன்னர் பார்த்த பாரிய ஆபத்திற்குரிய தண்டனைகள் இருப்பதனால், அப் பாவகாரியத்திற்கு இட்டுச் செல்லும் வழிகளை விட்டும் நபி  அவர்கள் எம்மை எச்சரித்துள்ளார்கள். அவற்றுக்கான சில உதாரணங்கள் வருமாற

1. நல்லடியார்கள் விடயத்தில் அளவுகடந்து செல்வதை தவிர்த்தல்:

நபி அவர்கள் கூறினார்கள்: “(நல்லடியார்கள் விடயத்தில்) அளவு கடந்து செல்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் மார்க்கத்தில் அளவுகடந்து செயற்பட்டமையினாலே அழிக்கப்பட்டனர்” .10 மேலும், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர்’ என்றும் சொல்லுங்கள்”

(அஹ்மத் தொடர்புடையது)
 

நல்லடியார்களை சாதனமாகப் பயன்படுத்தி, அல்லாஹ்வை அடைய முனைவதும் அவர்கள் விடயத்தில் எல்லைமீறுவதைனையே குறிக்கிறது. இதனை வஸீலா என்பர். வஸீலா என்பது பல வகையில் நிகழ்கின்றது:

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் அளவுக்கான இணைவைப்புடன் தொடர்புபட்ட வஸீலா: இது, நல்லடியார்களிடம் பிரார்த்தனை புரிவதையும், தமது தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுவதையும், தமக்கு ஏற்பட்டுள்ள தீங்குளை நீக்குமாறு கோருவதையும் குறிக்கும்.

இணைவைத்தலின் அளவுக்கு சென்றுவிடாத, நூதன வஸீலா: இது நல்லடியார்களின் ஆசி, கண்ணியம், பொருட்டு போன்றவற்றால் அல்லாஹ்வை நெருங்க முனைவதைக் குறிக்கும். அல்லாஹ் இவ்வாறான நடைமுறையை எமக்குக் காட்டித் தரவில்லை.

ஆகுமாக்கப்பட்ட வஸீலா: இது ஓர் அடியான் அல்லாஹ்வை ஈமான் கொள்வதையும், அவனுக்கு வழிபடுவதையும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், தாம் செய்த நற்செயல்கள் போன்றவற்றினையும் முன்வைத்து அவனை நேரடியாக நெருங்குவதைக் குறிக்கும். அல்லது ஓர் நல்லடியாரிடம் பொதுவாக தமக்குப் பிரார்த்திக்குமாறு வேண்டுவயும் குறிக்கும்.

இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!

(புஹாரி )
 

என்ற உமர்  அவர்களின் கூற்று,நபி அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ்  அவர்களை பிரார்த்தனை புரியக் கோருவதை சுட்டிக்காட்டுகிறதே தவிர, அவரின் பொருட்டால் வஸீலா கேட்கப்படுகிறது எனும் அர்த்தத்தை வழங்கவில்லை. ஒவ்வொருவரினதும் பொருட்டால் வஸீலா தேட வேண்டுமென அல்லாஹ் எமக்கு கட்டளையிட்டிருந்தால் நபியவர்களின் மரணத்திற்குப் பின்னரும் அவரின் பொருட்டால் ஸஹாபாக்கள் வஸீலா தேடியிருப்பார்கள். அப்பாஸ்  அவர்களை பிரார்த்தனை புரிய அழைத்து வரத் தேவையில்

2. மண்ணறைகளாலும், கல்லறைகளாலும் மனம் கவரப்படாமல் இருத்தல்:


03

அவற்றின் வெளிப்பாடுகள் சில அ. அவற்றைவணக்கஸ்தலமாக ஆக்கிக்கொள்ளல்: “நபி  அவர்கள் மரண வேளைநெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும், மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்’ எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி  அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி  அவர்கள் இந்த விஷயத்தில்பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.”

(அல்-புகாரி தொடர்புடையது)
 

மேலும் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் தங்கள் நபிமார்களினதும், நல்லடியார்களினதும் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். அதனை விட்டும் உங்களை நான் தடுக்கிறேன்”

(முஸ்லிம் தொடர்புடையது)
 

Making a grave a place of worship means praying near or to the grave, even though no mosque is built next to it or surrounding it.

மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக்கொள்வது என்பது வணக்க வழிபாடுகளை அங்கு செய்வதனைக் குறிக்கும். அவ்விடத்தில் தொழுதல், பள்ளியைக் கட்டுதல், ஸஜ்தா செய்தல், பிரார்த்தனை புரிதல் போன்றன இதற்கான சில உதாரணங்களாகும்.ஆ. மண்ணறைகளை அதன் மீதுள்ள மண்ணைத் தவிர ஏனையவற்றால் கட்டி, அலங்கரித்தல்: "அபுல் ஹய்யாஜ் அல் அஸதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : “என்னை எதற்காக நபி  அவர்கள் அனுப்பிவைத்தார்களோ அவ்விடயத்திற்கு உன்னையும் நான் அனுப்பவா? ஒன்றுவிடாமல் அனைத்து சிலைகளையும் தகர்த்திடு, உயர்வாக கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு மண்ணறைகளையும் தகர்த்து தரைமட்டாக்கிடு” என அலி  அவர்கள் எனக்கு ஆணைபிறப்பித்தார்கள"

(முஸ்லிம் தொடர்புடையது)
 

“நபி  அவர்கள் மண்ணறைகளை உயர்த்திக் கட்டுவதையும், அவற்றின் அருகில் அமருவதையும், அவற்றில் கட்டிடம் கட்டுவதையும் தடுத்துள்ளார்கள்”

(முஸ்லிம் தொடர்புடையது)
 

இவ்வாறான தடைகளுக்குள் அவற்றின் மேல் குப்பாக்களை அமைத்து, அவற்றை அலங்கரித்து, அவற்றில் எழுத்தணிகளையும், உருஅணிகளையும் வரைவதும் உள்ளடங்கும். அவ்வாறே அவற்றில் விளக்குகள் பற்றவைத்தல், பிறமத சடங்குளை செய்தல் போன்றவனவும் இத்தகைய தடையில் உள்ளடங்கும்.

கட்டுச்சாதனங்களுடன் மண்ணறைகளை தரிசித்தல்: நபி  அவர்கள் கூறினார்கள், “‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து) வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது.”

(அல்-புகாரி தொடர்புடையது)
 

நபி அவர்களின் மண்ணறையை வணக்கஸ்தலமாக ஆக்குதல்: நபியவர்கள் கூறினார்கள், “எனது மண்ணறையை கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் கொண்டாட்டம் எனும் சொல் மக்கள் குறிப்பிட்ட காலத்தில் அவ்விடத்திற்கு வந்து, சில வழிபாடுகளை அவ்விடத்தில் நிறைவேற்றுவதைக் குறிக்கும்.”

3.நம்பிக்கை, வணக்கவழிபாடுகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் இணைவைப்போருக்கும், வேதக்காரர்களுக்கும் ஒப்பாகாமல் இருத்தல்.

நபி அவர்கள “இணைவைப்போருக்கும"

(அல்-புகாரி தொடர்புடையது)
 

"நெருப்பு வணங்கிகளுக்கும"

(முஸ்லிம் தொடர்புடையது)
 

"யூதர்களுக்கும மாற்றமாக நடந்துகொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்கள்."

(அபு தாவூத் தொடர்புடையது)
 

4. உருவப்படங்களை வரைவதைவிட்டும் தவிர்ந்திருத்தல்.

உம்முஸலமா  அபீ ஸீனியாவில் தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றியும், அதில் கண்ட உருவங் களையும் நபி  அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி , ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்’ என்று கூறினார்கள

(அல்-புகாரி தொடர்புடையது)
 
04

5. இணைவைத்தலுடன் தொடர்புபட்ட வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்தல்.

அவற்றில் சில பின்வருமாறு :

அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தல்: நபி அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் அல்லாதவற்றின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார், அல்லத அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்”"

(அல்-திர்மிதி தொடர்புடையது)
 

ஆ. நாட்டத்தில் அல்லாஹ்வோடு பிறரையும் சமப்படுத்தல்: நபி அவர்களிடம் “அல்லாஹ்வும், நீரும் நாடிவிட்டீர்கள் என ஒருவர் கூறினார். அதற்கு நபியவர்கள் நீ என்னை அல்லாஹ்வுடன் சமப்படுத்துகிறீரா? அல்லாஹ் மாத்திரம் தான் நாடினான் எனக் கூறும்”

(அல்-சசான் அல்-குப்ராவில் அல்-நஸாயி தொடர்புடையது)
 

இன்ன நட்சத்திரத்தினால் எமக்கு மழை கிடைக்கிறது எனக் கூறல்: "நபி அவர்கள் ‘ஹுதைபிய்யா’ எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்’ என்று நாங்கள் கூறினோம். ‘என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள"

(அல்-புகாரி தொடர்புடையது)
 

இவ்வுலகில் நிகழும் எக்காரியமாக இருப்பினும் அவை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரது சக்தியாலும் நிகழ்வதில்லை. அவ்வாறு பிற சக்திகளினால் தான் அவை ஏற்படுகின்றன என எவர் கூறினாலும் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட

6. இணைவைப்புக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்திருத

அவற்றில் சில பின்வருமாறு :

தனக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கையிலும், கழுத்திலும் கயிறு, வலையம் போன்றவற்றை அணிதல்: ": நபி அவர்கள் கையில் செம்பினால் ஆன வலையமொன்றை அணிந்திருந்த ஒருவரைக் கண்டு, “உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?, இது என்ன?” எனக்கேட்டார்கள். அதற்கு அம் மனிதர் “வாஹினா எனும் பலவீனத்திலிருந்து பாதுகாப்பு பெறவே இது” எனக் கூறினார். அதற்கு நபியவர்கள், “இதனை கழட்டிவிடு, இது உனக்கு பலவீனத்தை இன்னும் அதிகப்படுத்தும். இதனோடு நீ மரணித்தால் ஒருபோதும் நீ வெற்றியடையமாட்டீர்” எனக் கூறினார்கள். "

(அஹ்மத் தொடர்புடையது)
 

ஆ. கண்ணூரிலிருந்து பாதுகாப்புப் பெற தாயத்து, சிற்பி, திருஷ்டி மாலை, அட்டிகை போன்றவற்றை கழுத்தில் தொங்கவிடுதல்: நபி  அவர்கள் கூறினார்கள் : “யார் தாயத்தை அணிகிறாரோ அவருக்கு அல்லாஹ் எந்தவொன்றையும் பூரணமாக்கமாட்டான். யார் சிற்பியை மாலையாக அணிகிறாரோ அவரை அல்லாஹ் பாதுகாத்திட மாட்டான்”

(அஹ்மத் தொடர்புடையது)
 

“யார் தாயத்தை அணிகிறாரோ அவர் இணைவைத்து விட்டார்” என மற்றுமொரு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. 'நான் இறைத்தூதர்  அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன்.'

(அஹ்மத் தொடர்புடையது)
 

இறைத்தூதர் அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலைய�ோ அல்லது வேறெந்த மாலைய�ோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்’ என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.”

(அல்-புகாரி தொடர்புடையது)
 

இணைவைத்தலுடன் தொடர்புபட்ட ஓதிப்பார்த்தல்: "நபி அவர்கள் கூறினார்கள், “ஓதிப்பார்த்தலும், தாயத்துக்களும், திவலாவும் இணைவைப்பாகும"

(அபு தாவூத் தொடர்புடையது)
 

இங்கு குறிப்பிடப்படும் ஓதிப்பார்த்தல் என்பது பிற கடவுள்களிடமோ, நல்லடியார்களிடமோ அருள் வேண்டும் வகையில் யாரும் அறிந்திராத மொழியில் கூறப்படும் வார்த்தைகளாகும். திவலா என்பது கனவன் தன்னுடன் எப்போதும் இரக்கமாக இருக்க வேண்டுமெனும் நம்பிக்கையில் பெண்கள் ஏதாவது ஓர் பொருளில் மந்திரம் செய்வதைக் குறிக்கும்.

அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் நிகழ்வுகள் இடம்பெறும் இடத்தில் அறுத்துப்பலியிடல்: "புவானா எனும் இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டுமென நேர்ச்சை வைத்திருந்த ஓர் மனிதர் அவ்வாறு செய்வதற்கு நபியவர்களிடம் வினவிய போது, “அங்கு ஜாஹிலிய்யாக் காலத்தில் மக்கள் வழிபட்டு வந்த சிலைகள் ஏதும் இருந்தனவா?” எனக் கேட்டார்கள். அதற்கு (ஸஹாபாக்கள்) “இல்லை” என்றார்கள். “அங்கு அவர்களின் கொண்டாட்டங்கள் ஏதும் நடைபெற்றனவா?” என நபியவர்கள் வினவ, (ஸஹாபாக்களும்) “இல்லை” என்றார்கள். அப்போது நபியவர்கள் அம்மனிதரிடம், “உமது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்றார்கள"

(அபு தாவூத் தொடர்புடையது)
 

சகுணம் பார்த்தல்: நபி அவர்கள் கூறினார்கள்: “பறவை சகுணம் இணைவைப்பாகும், பறவை சகுணம் இணைவைப்பாகும்”

(அபு தாவூத் தொடர்புடையது)
 

சுருக்கமாக கூறுவதானால் அல்லாஹ்வை வணங்குவதற்கும், அவனிடம் பாதுகாவல் தேடுவதற்கும் அவன் காரணமாக வைக்காத விடயங்களை செய்வது இணைவைப்பையே சாரும். ஏனெனில் அத்தகயைக காரணங்களை அல்லாஹ்வுக்கு சமமாக ஆக்கும் மறைமுகமான செயல் இதில் இடம்பெறுகிறது.

seegogImg

நான்கு: கடவுளின் பெயர்கள் மற்றும் அட்டூழியங்களில் நம்பிக்கை


அல்லாஹ்வுக்கென தனித்துவமான அழகிய பெயர்களும், உயரிய பண்புகளும் இருக்கின்றன என உறுதியாக நம்பிக்கை கொள்வதை இது குறிக்கிறது. அல்குர்ஆனில் அல்லாஹ் உறுதிப்படுத்துகிற, அல்லது சரியான நபிமொழிகளில் நபி  அவர்கள் உறுதிப்படுத்தியுள்ள அல்லாஹ்வுக்கென இருக்கும் பூரண, கண்ணியமிக்க பண்புகளை எவ்வித ஒப்புவமையும், உருவக சிந்தனையுமின்றி உறுதிப்படுத்திட வேண்டும். அவ்வாறே அல்லாஹ் அல்குர்ஆனில் தனக்கு இல்லையெனக் கூறுகிற, அல்லது சரியான நபிமொழிகளில் நபியவர்கள் அல்லாஹ்வுக்கு இருக்கமுடியாது எனக் கூறியுள்ள, படைப்பினங்களுக்கு ஒப்பான குறையுள்ள பண்புகளை எவ்வித மறுப்பும், திரிவுபடுத்தலும் இன்றி உறுதியாக மறுத்திட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.”

(அல்குர்ஆன் 07:180)
 

“அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.”

(அல்குர்ஆன் 42:11)
 

அல்லாஹ்வின் பெயர்களையும், அவனின் பண்புகளையும் பகுத்தறிவை அடிப்டையாக வைத்து உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் அவை அல்குர்ஆன், ஸுன்னாவோடு மாத்திரம் சுருக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வைப் பற்றி அவனும், நபி  அவர்களும் வர்ணித்துள்ள விதத்தைத் தவிர வேறு எவ்வகையிலும் வர்ணிப்பது கூடாது. அல்லாஹ்வும், நபி  அவர்களும் அல்லாஹ்வின் சில பண்புகள் பற்றி ஏதும் கூறவில்லையாயின் அவற்றில் நாம் மௌனம்காத்திட வேண்டும். ஒருவர் அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் கூற முற்பட்டால், அவர் சரியான கருத்தைக் கூறியிருப்பின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர் பயன்படுத்திய சொல் நிராகரிக்கப்படும். அவர் தவறான கருத்தைக் கூறியிருப்பின் அவரின் கருத்தும், அவர் பயன்படுத்திய சொல்லும் நிராகரிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான் : “எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லைய�ோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.”

(அல்குர்ஆன் 17:36)
 

அல்லாஹ்வின் பெயர்கள் மிகவும் சிறப்பானவை. அவை தான் அல்லாஹ்வின் அடையாளமும், அவனின் பண்புகளை பிரதிபலிப்பவையாகவும் இருக்கின்றன. அவ்வாறே அவனின் பண்புகளும் பூரணமானவை. அவற்றில் எந்தவொன்றையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அல்லாஹ் கூறுகிறான் : “வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”

(அல்குர்ஆன் 30:27)
 
 seegogImg

இவை அல்லாஹ்வுக்கிருக்கும் யதார்த்தமான பெயர்களும், பண்புகளுமாகும். இவற்றை எவ்வித திரிபுகளும் இன்றி அதன் போக்கிலே விட்டுவிட வேண்டும். இவற்றை மறுத்தல், ஒப்புவமை வழங்கல், அல்லாஹ் தனக்கு சூட்டாத புதிய பெயர் ஒன்றை அவனுக்கு சூட்டுதல், அல்லது அவனின் பெயர்களை சிலைகளுக்கு வைத்தல் போன்ற எல்லை மீறும் விடயங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.

இவற்றைக் கொண்டே நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். அவற்றைப் பேணிப் பாதுகாத்து, பொருளை அறிந்து, கருத்தாழத்தை சிந்தித்து, அதன் படி எமது செயற்பாடுகளை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இதுவே மிகவும் சிறப்பான ஓர் அறிவுத் துறையாகும

அல்லாஹ்வின் பண்புகளை பின்வருமாறு பிரித்து நோக்கமுடியும்:

1. தன்னுள் இருக்கும் பண்புகள

உயிருடன் இருத்தல், கேட்டல், பார்த்தல், அறிதல், சக்தியுடன் இருத்தல், எதையும் நாடுதல், எதிலும் நுட்பமாக இருத்தல், பலம்வாய்ந்தவானாய் இருத்தல் போன்ற பண்புகள் இவ்வகையைச் சார்ந்தவைகளாகும். ஏனெனில் இவை கண்ணியமிக்க அல்லாஹ்வுக்கு எப்போதுமே அவசியம் இருந்தாக வேண்டிய பண்புகளாகும்.

2. செயல்ரீதியான பண்புகள்.

இவ்வகையான பண்புகள் அல்லாஹ்வின் நாட்டத்தோடு சம்பந்தப்பட்டவை. அவன் அவற்றை விரும்பிய நேரத்தில், விரும்பிய விதத்தில்செய்வான். இத்தகைய பண்புகள் யாவும் அல்குர்ஆனிலும், சரியானநபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. அர்ஷின் மீது உயர்தல், அடிவானத்துக்கு இறங்குதல், அன்புகொள்ளல், கோபமடைதல், சந்தோசமடைதல், ஆச்சரியமடைதல், சிரித்தல், வருதல் போன்ற பண்புகள் இவ் வகையைச் சார்ந்தவைகளாகும். பேசுதல் எனும் அல்லாஹ்வின் பண்பானது மேற்குறிப்பிட்ட இரு வகையிலும் உள்ளடங்கும்.

2 Related by Muslim, 8.

பேசுதல் என்பது அல்லாஹ்வுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்பு எனும் அடிப்படையில் அது முதல் வகையையும், பேசும் போது அது நாட்டத்துடன் சம்பந்தப்படுவதால் இரண்டாவது வகையையும் சாரும்.

அல்குர்ஆன் மற்றும் ஸுன்னா எமக்கு கூறும் அல்லாஹ்வின் பண்புகளான முகம், கை, கண், கால் போன்றவற்றை அவை கூறியுள்ள பிரகாரமே ஏற்க வேண்டுமே தவிர இவற்றில் பகுத்தறிவை பயன்படுத்துவது கூடாது. இவற்றுக்கு தகவல் ரீதியான பண்புகள் எனப்படும்.

அல்குர்ஆன், ஸுன்னா மற்றும் இஜ்மாவில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் சில பண்புகள் வருமாற

1. உயர்வு.

இப் பண்பு மூன்று வகைப்படும்.

பண்புகளால் உயர்வானவன்: அல்லாஹ்வின் அனைத்து பண்புகளும் முழுமைபெற்றவை, எவ்விதக் குறைபாடுகளும் அற்ற பூரணத்துவம் வாய்ந்தவை, மனிதர்களின் பண்புகளை விடவும் முற்றிலும் மாறுபட்ட அதியுயர் அந்தஸ்து உள்ளவை என்பதை இது குறிக்கிறது. அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது”

(அல்குர்ஆன் 16:60)
 
2 Related by Muslim, 8.
seegogImg

அடக்கியாள்வதில் உயர்வானவன்: கௌரவம், வல்லமை, அனைத்தையும் மிகைக்கும் தன்மை, தனது படைப்பினங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் போன்ற ஆளும் பண்புகளில் அல்லாஹ்வே உயர்வானவன் என்பதை இது குறிக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்: “அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.”

(அல்குர்ஆன் 06:18)
 

அனைத்திற்கும் மேலால் இருப்பவன்:படைப்பினங்களை விட்டும் தூரமாகி, ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீது அல்லாஹ் நிலைபெற்றுள்ளான் என்பதை இது குறிக்கிறது. அல்லாஹ் கூறுகிறான் : “வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில்சொறுகிவிடுவான் என்பதைபற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா?”

(அல்குர்ஆன் 67:16)
 

மேலும் நபி  அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடம் “அல்லாஹ் எங்கிருக்கிறான்?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், “வானத்தில் இருக்கிறான்” என்றாள். அப்போது நபியவர்கள், “நான் யார்?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள். உடனே நபியவர்கள், “அவளை விடுவியுங்கள், அவள் இறைவிசுவாசி” என்றார்கள் .இவ்வகை சார்ந்தபண்புகளை உறுதிப்படுத்துவதற்கு அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும், இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகளிலும், பகுத்தறிவு ரீதியாகவும், இயல்புநிலை அடிப்படையிலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. உயர்வு என்பது அல்லாஹ்வின் தனித்துவமான தன்னிலை பண்பாகும்.

seegogImg

2. (அர்ஷின் மீது) உயர்தல் :

“பின் அர்ஷின் மீது உயர்ந்தான்”

(அல்குர்ஆன் 07:54)
 

என்ற அல்லாஹ்வின் கூற்று அல்குர்ஆனில் மொத்தமாக ஆறு இடங்களில் இடம்பெறுகிறது. ஏழாவது இடத்தில “அர்ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான்.”

(அல்குர்ஆன் 20:05)
 
seegogImg

என இடம்பெற்றுள்ளது. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததன் பின் தன் வல்லமைக்கும், கௌரவத்திற்கும், கண்ணியத்திற்கும் தகுந்தவாறு அல்லாஹ் அர்ஷின் மீது நிலைபெற்றுவிட்டான் என்பதே இதன் அர்த்தமாகும். இதை படைப்பினங்களின் நிலைக்கு ஒப்பிட்டு பார்த்திட முடியாது. நிலைகொள்ளல் என்பது அல்லாஹ்வின் செயல்ரீதியான பண்பாகும்.

3. பேச்சு.

அல்லாஹ் கூறுகிறான் : “(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்) காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”

(அல்குர்ஆன் 18:109)
 

“இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 04:164)
 
seegogImg
70 Related by Muslim, 1851.

“நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்”

(அல்குர்ஆன் 07:143)
 

படைப்பினங்களின் பேச்சுக்கு ஒப்பாகாத, சப்தங்கள், எழுத்துக்களின் மூலம், கேட்கும் வகையில், யதார்த்தமாகவே அல்லாஹ் பேசுவான். தான் விரும்பிய நேரத்தில், விரும்பியவற்றை, விரும்பிய விதத்தில் உண்மையாகவும், நீதமாகவும் பேசுவான். அல்லாஹ்வின் பேச்சு புதிதாக உருவாகிய ஒன்றல்ல. இப் பண்பானது அவனுடனே இருக்கும் ஒன்று. அவனது பேச்சுக்களினால் வெளியாகும் வார்த்தைகள் முடிவுறாது. அல்லாஹ்வின் பேசும் இப் பண்பானது பேசுதல் எனும் அடிப்படையில் அவனின் தன்னிலை பண்பிலும், நாட்டத்துடன் சம்பந்தப்படும் போது அது செயல்ரீதியான பண்பிலும் சேரும்.

இவை போன்ற அல்லாஹ்வின் ஏனைய பண்புகள் அனைத்தும் அவனுக்கே உரிய பாணியில் யதார்த்தமாக அமையப்பெற்றுள்ளன. அப் பண்புகளை அல்குர்ஆனும், சரியான நபிமொழிகளும் கூறுவது போன்று எவ்வித ஒப்புவமை, உருவக சிந்தனை என்பன இல்லாமலும், எவ்வித மறுப்பும், திரிபுபடுத்தல் இன்றியும் உறுதிப்படுத்திட வேண்டும். மேற்கண்ட விதிமுறை அல்லாஹ்வின் அனைத்து பெயர், பாண்புகளுக்கும் பொருந்தக் கூடியது. ஒரு பண்பு பற்றிப் பேசுவது அனைத்துப் பண்புகளைப் பற்றியும் பேசுவதாகும். எனவே அனைத்துப் பண்புகளையும் ஒரே மாதிரி ஏற்க வேண்டும். யார் இப் பண்புகளை அளவுகடந்து சித்தரிக்கிறாரோ அவர் ஆதாரமற்ற முறையில் தீர்ப்பு வழங்கி, வழிதவறிவிட்டார்.

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை தவறாக சித்தரித்ததனால் சில வழிகெட்ட பிரிவினர்கள் தோற்றம் பெற்றனர். அவர்கள் வருமாறு:

1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு ஒப்புவமை வழங்கியோர்.

இவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை உறுதிப்படுத்தும் விடயத்தில் எல்லை மீறி, இறுதியில் அப் பெயர்களும், பண்புகளும் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பானவை எனக் கூறும் அளவுக்கு அளவுகடந்து சென்றவர்கள். ஏனெனில் அல்லாஹ் யாரும் அறியாத ஒரு பண்பைப் பற்றி படைப்பினங்களுக்கு கூறமாட்டான். அப்படி கூறுவதாயின் அப் பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒத்திருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதமாகும்.

seegogImg
70 Related by Muslim, 1851.

இவர்களுக்கான மறுப்பு:

i. அல்லாஹ் தனக்கு ஒப்புவமைய�ோ, நிகரோ கிடையாது என அல்குர்ஆனின் பல வசனங்களினூடாகக் குறிப்பிடுகிறான். அல்லாஹ் கூறுகிறான் : “அவனைப் போன்று எப்பொருளும் இல்லை;”

(அல்குர்ஆன் 42:11)
 

“(இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.”

(அல்குர்ஆன் 02:22)
 

“அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.”

(அல்குர்ஆன் 112:04)
 

அல்லாஹ்வின் இவ் வார்த்தைகளில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு எவ் வகையிலும் சாத்தியம் கிடையாது.

பூரணத்துவம் வாய்ந்த படைப்பாளனாகிய எல்லாம் வல்ல இறைவன் குறைபாடுகள் பல உள்ள படைப்பினங்களுக்கு எவ்வகையிலும் ஒப்பாக முடியாது என்பதை சீரான பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும். அவ்வாறே முழுமை பெற்ற அவனின் சுயரூபம், குறைகளுள்ளபடைப்பினங்களின் சுயரூபங்களுக்கோ, பூரணத்துவம் வாய்ந்த அவனின் பண்புகள் படைப்பினங்களின் குறைபாடான பண்புகளுக்கோ எவ்வகையிலும் ஒப்பாகமுடியாது என்பதனை சீரான பகுத்தறிவு எப்போதும் ஏற்றுக்கொள்ளும்.

அல்லாஹ் தன் அடியார்கள் விளங்கிக்கொள்ளும் விதமாகவே அடிப்படையில் ஒரு விடயத்தை அவர்களுடன் பேசுவான். பொதுப்படையாக பெயரளவில் ஒன்றுபடும் அனைத்துப் பண்புகளும் யதார்தத்திலும், செயல்படும் விதத்திலும் ஒன்றுபட வேண்டுமென்று எந்த விதிமுறையும் இல்லை. கண், காது, கை, முகம், சக்தி போன்றன ஒரே பெயரில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் இருப்பதனால் அவை அனைத்தும் யதார்தத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. படைப்பினங்களுக்குள்ளே இவ்வாறு பல வேறுபாடுகள் இருக்கும் போது, படைத்தவன் அதை விடவும் மேலானவன்.

2. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை மறுப்போர்.

இவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் படைப்புக்களுக்கு ஒப்பாகாது எனும் விடயத்தை உறுதிப்படுத்துவதில் எல்லை மீறி, இறுதியில் அல்லாஹ்வுக்கு பண்புகளே இல்லை எனக் கூறும் அளவுக்கு அளவு கடந்து சென்றோர். அல்லாஹ்வுக்கு பண்புகள் இருப்பதாகக் கூறுவது, அப்பண்புகள் எத்தகையது எனும் விளக்கத்திற்கு உட்படுகிறது. இதன் போது அப் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஏனெனில் படைப்பினங்களுக்கு இப்பண்புகள் இருப்பதால் படைப்பாளனுக்கு அவை இருக்க முடியாது. எனவே அல்லாஹ்வுக்கு பண்புகளே இல்லை எனக் கூறினால் இத்தகைய ஒப்புவமை ஏற்படாது என்பது இவர்களின் வாதமாகும்.

seegogImg

அல்லாஹ் எவ்விதப் பண்புகளுமின்றி வெறுமனே இருக்கிறான் என்பது இவர்களின் கூற்றாகும். இவர்களில் கராமிதாக்கள், பாதினிய்யாக்கள் போன்றோர் அல்லாஹ் இருக்கிறான் என்பதையும் மறுக்கின்றனர், அல்லாஹ் இல்லை என்பதையும் மறுக்கின்றனர். பகுத்தறிவே ஏற்காத விதத்தில் எதிரும் புதிருமான இரு விடயங்களை ஒரே நேரத்தில் மறுக்கின்றனர். அதற்கடுத்து ஜஹ்மிய்யாக்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் அனைத்தையும் மறுக்கின்றனர். அவர்களையடுத்து முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பெயர்களை ஏற்றுக்கொண்டு, அப்பெயர்கள் பொதிந்துள்ள அவனின் பண்புகளை மறுக்கின்றன

i. இவர்களுக்கான மறுப்பு:அல்லாஹ் தனக்கு பண்புகள் இருப்பதாக பல அல்குர்ஆன் வசனங்களில் தெளிவாகவே கூறுகிறான். அவை ஒப்புவமையற்றது என்பதையும் விரிவாகவே விளக்குகிறான். அல்லாஹ் கூறுகிறான் : “அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.”

(அல்குர்ஆன் 42:11)
 

அல்லாஹ்வின் இவ் வார்த்தைகளில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு எவ் வகையிலும் சாத்தியம் கிடையாது.

ii. எவ்விதப் பண்புகளுமின்றி ஒரு பொருள் இவ்வுலகில் இருப்பதாகக் கூறுவது கற்பனையில் மாத்திரம் நிகழுமே தவிர நிஜத்தில் அப்படி ஒன்று இருப்பதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது. அல்லாஹ் பற்றிய இவர்களின் இக்கூற்றானது அவனை மறுப்பதையே சுட்டிக்காட்டுகிறத

ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி சட்டவிரோதமானது என்பதாகும்

அதாவது ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி

shape

அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களின் பண்பு, மற்றும் யதார்தத்தங்கள், இருவருக்குமே சமமாக இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. அப் பண்புகள் இருவருக்குமே வித்தியாசப்படும். ஏனெனில் ஓர் பண்பை இது இன்னாருக்குரியது என குறிப்பிட்டுக் கூறும் போது மற்றவர் மீதான பொதுப்படை நீங்குகிறது.

3. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை திரிபுபடுத்துவோர்.

இவர்கள் அல்லாஹ்வின் பண்புகள் பற்றி குறிப்பிடும் அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள், அவனின் யதார்த்தமான பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுவது கிடையாது என எண்ணி, அவற்றுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமுமற்ற முறையில் வேறுவித கருத்துக்களைக் கூற முனைகின்றனர். இவர்களே அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை திரிபுபடுத்துவோர் என இஸ்லாமிய அறிஞர்களால் கூறப்படுபவர்கள். ஆனால் இவர்கள் தாங்கள் கொடுக்கும் விளக்கத்திற்கு தஃவீல் என்றே பெயர் சூட்டி வருகின்றன

இவர்களுக்கான மறுப்பு:

i. Fஅல்லாஹ் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவன், உண்மை பேசுபவன், தன் அடியார்களுக்கு அனைத்தையும் தெளிவாகவும், சிறந்த முறையிலும் விளக்குபவன், அவ்வாறே நபி  அவர்கள் தன் இறைவனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், உண்மை பேசக்கூடியவர்கள், எதையும் தெளிவாக கூறக்கூடியவர்கள். இப்படியிருக்க அல்லாஹ்வையும், நபி  அவர்களையும் குறைத்து மதிப்பிட்டு, அவர்கள் கூறியவற்றில் பிழை கண்டு, தன் சுயவிருப்பப்படி வேறுவித கருத்துக்களைக் கூறுவதற்கு இவர்களுக்கு எவ்வாறு முடியும்? அல்லாஹ்வினதும், நபி  அவர்களினதும் கூற்றுக்களையும், கருத்துக்களையும் தவறானவை என எவ்வறு இவர்களால் சித்தரிக்க முடியும்?

ii. அடிப்படையில் ஓர் வார்த்தையானது அதன் யதார்த்தமான அர்த்தத்தையே வழங்குகிறது. அவ்வார்த்தை கூற வரும் அர்த்தம் வேறுவிதமானது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்க வேண்டும். இத்தகைய அல்லாஹ்வின் பண்புகளுக்கு வேறுவித அர்த்தங்களை வழங்குவதற்கு எத்தகைய தெளிவான ஆதாரங்களும் கிடையாது.

iii. நபி  அவர்கள் தன் இறைவனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டவற்றைதெளிவாகவே மக்களுக்கு விளக்கியுள்ளார்கள். அவ்வாறிருக்க இவர்கள் திரிபுபடுத்திக் கூறும் வார்த்தைகளுக்கான தேவை இருந்தால் அதனை நபி  அவர்கள் விளக்காமல் இருந்திருக்க முடியாது. சரியான அர்த்தத்தை அவர்களால் வழங்க முடியாமல் போயுள்ளது என்பதையே இவர்கள் கூற்றினூடாக அறிய முடிகிறது. அல்லாஹ்வே எமக்கு போதுமானவன்.

4. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளின் கருத்துக்களை அவனிடமேபொறுப்புச் சாட்டுவோ

இவர்கள் அல்லாஹ் தன்னைப் பற்றியும், நபி  அவர்கள் அல்லாஹ் பற்றியும் கூறியுள்ளவற்றின் அர்த்தங்களை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது எனக் கூறுபவர்கள். அவ் அர்த்தங்கள் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அவற்றை அறிய முற்படக் கூடாது என்பதே இவர்களின் வாதமாகும். அவர்களின் இந்நடைமுறைக்கு “தப்வீழ்” என நாமம் சூட்டிக் கொள்கின்றனர்.

இவர்களுக்கான மறுப்பு:

i. அல்லாஹ்வைப் பற்றி அறிந்துகொள்வது சிறந்த கல்வியாக இருக்கும் பட்சத்தில் இவ்வாதத்தின் மூலம் அவ் வாயில் மூடப்படுகிறது. இதற்கு இஸ்லாத்திலும், பகுத்தறிவிலும் எவ்வித ஆதாரமும் கிடையாத

ii. அல்லாஹ் அல்குர்ஆனை தெளிவான அரபு மொழியில் இறக்கி, அதை ஆய்வு செய்யுமாறும், ii. அதன் அர்த்தங்களை அறிந்துகொள்ளுமாறும் எவ்வித விதிவிலக்குமின்றி எமக்கு கட்டளையிட்டுள்ளான். இதன் மூலம் அல்குர்ஆனின் சொற்களுக்கான அர்த்தங்களை அறிய முடியும் என்பது தெளிவாகின்றது. ஆனால் அவற்றின் யதார்த்தங்களும், செயல்வடிவங்களும் மனிதர்களுக்கு மறைக்கப்பட்ட அறிவில் உள்ளதாகும். அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிந்திட முடியாது.

iii. அல்லாஹ்வின் பெயர், பண்புகளின் அர்த்தங்கள் அவனுக்கு மாத்திரம் தான் தெரியும் என்ற இந்தப் போக்கானது இந்த சமூகத்தின் மூத்தோர்களை அறிவீனர்களாக்கும் செயலாகும், எழுதத் iii. தெரியாத, அல்லாஹ்வின் வேதத்தை அறியாத அவன் விடயத்தில் பொய்களை மாத்திரம் சொல்லக்கூடியவர்களாக அவர்களை சித்தரித்துக் காட்டும் முயற்சியாகும். அவர்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் பண்புகளைப் பொதிந்துள்ள வசனங்கள் எந்தவொரு பொருளையும் கொடுக்காத வெறும் எழுத்துக்களாகவும் தாயத்துக்களாகவுமே உள்ளது. இது ஸலபுகளாகிய முன்னோர்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.

அல்லாஹ் தன்னை வணங்குவதற்கென ஓர் படைப்பினத்தைப் படைத்து, தன்னை மாத்திரமே வணங்க வேண்டுமென அவர்களைப் பணித்து, தனக்குப் பக்கத்தில் அவர்களை வைத்துக்கொண்டு, அவர்கள் வாழ்வதெற்கென வானுலகை ஏற்பாடு செய்துகொடுத்து, தனது கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான பலத்தை அவர்களுக்கு வழங்கியுள்ள ஓர் படைப்பினமே வானவர்கள் என நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.பின்வரும் விடயங்களை உறுதியாக ஏற்காத வரை நாம் மலக்குமார்களை நம்பிக்கை கொண்டோராக ஆக முடியாது. அவை வருமாறு:

1. அவர்கள், தன் இரட்சகனான அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணியக்கூடிய இறையச்சமுள்ள கண்ணியமிக்க அடியார்கள்.

உலகைப் பரிபாலிக்கும் விடயத்திலோ, கடவுள் தன்மையிலோ இவர்களுக்கு எவ்வித சக்திய�ோ, அதிகாரமோ கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை மாத்திரம் நிறைவேற்றக்கூடிய சாதாரன அடியார்களே இவர்கள். அல்லாஹ் கூறுகிறான் : “அவர்கள்; “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள். அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.”

(அல்குர்ஆன் 21:26-28)
 

“அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்.”

(அல்குர்ஆன் 16:50)
 

“அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.”

(அல்குர்ஆன் 66:06)
 

“(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.”

(அல்குர்ஆன் 80:16)
 

“(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான். (இதற்கு மலக்குகள்:) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.”

(அல்குர்ஆன் 34:40-41)
 

“அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.”

(அல்குர்ஆன் 02:32)
 

2. அவர்கள் கண்ணியமிக்க பெயர்களால் அழைக்கப்படக்கூடியவர்

அல்குர்ஆன் பெயர் குறிப்பிட்டுக் கூறும் மலக்குமார்களையும், பெயர் குறிப்பிடாமல் பொதுப்படையாகக் கூறியுள்ள மலக்குமார்களையும் நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும். அவ்வாறு அல்குர்ஆனிலும், சரியான நபிமொழிகளிலும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மலக்குமார்களின் பெயர்கள் வருமாறு: ஜிப்ரீல், மீகாஈல், இஸ்ராபீல், மலகுல் மவ்த், மாலிக், ரிழ்வான், முன்கர், நகீர் ஆகிய�ோராவார்கள்.

3. அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், பிரமாண்ட வடிவங்களில் இறக்கைகளுடையவர்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.”

(அல்குர்ஆன் 35:01)
 

நபி அவர்கள் கூறினார்கள் : “மலக்குமார்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்”32 , “நபியவர்கள் ஜிப்ரீல்  அவர்களை அவரது சுய தோற்றத்தில் கண்டுள்ளார்கள். அவருக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன. ஒவ்வொரு இறக்கையும் வானத்தை முட்டும் அளவுக்கு இருந்தது”

(முஸ்லிம் தொடர்புடையது)
 

மலக்குமார்களின் பிரமாண்டத்தைப் பற்றி நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள், “அல்லாஹ்வின் சிம்மாசனத்தை சுமக்கும் மலக்குமார்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரது காதின் தோடிற்கும், கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதி எழுநூறு வருடங்கள் பயணிற்கும் கால எல்லைக்கு ஈடானது”

(அல்-புகாரி தொடர்புடையது)
 

மலக்குமார்களின் படைப்பு கற்பனைவாதிகளால் வர்ணிக்கப்படும் கற்பனைக் கதாபாத்திரமல்லாத யதார்த்தமான படைப்பாகும். அவர்களின் எண்ணிக்கையை படைத்தவனைத் தவிர வேறு யாரும் அறிந்திட முடியாது. நபியவர்களின் விண்வெளிப் பயணம் பற்றி குறிப்பிடும் ஹதீஸில் : “நபியவர்களுக்கு ஏழாம் வானத்திலுள்ள பைதுல் மஃமூர் எனும் பள்ளிவாயல் காண்பிக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் மலக்குமார்கள் தொழுவார்கள். அப்பள்ளியைவிட்டும் அவர்கள் வெளியேறிவிட்டால் திரும்பவும் அங்கு வரமாட்டார்கள். வேறு மலக்குமார்களே அவர்களின் இடத்தை நிரப்புவர்”

(அபு தாவூத் தொடர்புடையது)
 

எனும் செய்தி இடம்பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் புதிய எழுபதாயிரம் மலக்குகள் தொழுகிறார்கள் எனில் உலகம் அழியும் வரைக்கும் அவர்களின் வரவு இருந்துகொண்டே இருக்கும். ஆகையால அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ் மாத்திரமே அறிவான

4. அவர்கள் அணிவகுத்து நிற்பவர்கள், எப்போதும் அல்லாஹ்வை துதிபாடுபவர்

தன்னை எப்போதும் துதிபாட வேண்டுமெனவும், தனது கட்டளைகளை நிறைவேற்றிட வேண்டுமெனவும் மலக்குமார்களுக்கு அல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளான். அவற்றை நிறைவேற்றுவதற்கான பலத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளான். அது பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : “(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.” “நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்). “மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”

(அல்குர்ஆன் 37:164-166)
 

மேலும், “ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.”

(அல்குர்ஆன் 41:38)
 

“இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.”

(அல்குர்ஆன் 21:20)
 

ஒரு நாள் நபி  அவர்கள் தனது தோழர்களுடன் இருக்கும் போது, தனது தோழர்களைப் பார்த்து, “நான் செவிமடுப்பதை நீங்களும் செவிமடுக்கிறீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாம் எதையும் செவிமடுக்கவில்லை அல்லாஹ்வின் தூதரே எனக் கூறினார்கள்”. அப்போது நபியவர்கள், “நான் வானத்தில் முனங்கல்சப்தங்களைசெவிமடுக்கிறேன், அது அங்கு நிகழவேண்டிய ஒன்று தான். வானில் ஒரு இடம்விடாது எல்லா இடத்திலும் மலக்குமார்கள் நின்ற வண்ணமும், சிரம்பணிந்த வண்ணமும் இருக்கிறார்கள்” எனக் கூறினார்கள

(தபாரானி )
 

5. அவர்கள் மனிதப் பார்வைக்கு மறைக்கப்பட்டவர்

மலக்குமார்கள் மறைவான உலகில் வாழ்ந்து வருபவர்கள். மனிதனின் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இவ்வுலகில் அல்லாஹ் நாடிய சிலரைத் தவிர அவர்களை வேறு யாராலும் பார்க்க முடியாது. ஆனால் மறுமை நாளில் அவர்களைக் காணும் பாக்கியம் மனிதர்களுக்கு வழங்கப்படும். அல்லாஹ் கூறுகிறான் : “அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.”

(அல்குர்ஆன் 25:22)
 

“நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.”

(அல்குர்ஆன் 13:23)
 

அல்லாஹ் இத்தகைய மலக்குமார்களுக்கு மனிதனின் தோற்றத்திற்கு மாறக்கூடிய ஆற்றலை வழங்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான் : “அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.”

(அல்குர்ஆன் 19:17)
 
2 Related by Muslim,

“நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐய

அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது, (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடையசமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்..”

(அல்குர்ஆன் 11:69-70)
 

“நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினாரஅவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்)

என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.”

(அல்குர்ஆன் 11:77-78)
 

அப்போது அந்த மலக்குகள் ஆண்களின் தோற்றத்திலேயே இருந்தார்கள அதேபோன்று ஸஹாபாக்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களைக் கற்றுக்கொடுப்பதற்காய் நபியவர்கள் முன்னிலையில் வெண்ணிற ஆடை அணிந்த மனிதராகவும், கருநிற தலைமுடி கொண்டவராகவும் ஜிப்ரீல்  தோற்றம் பெற்றார். அவர் திஹ்யா அல்கல்பீ  என்ற ஸஹாபியின் தோற்றத்திலே அதிகமாக நபியவர்கள் முன்னிலையில் தோன்றுவார்.

6. அவர்கள் பலதரப்பட்ட பணிகளுக்குப் பொறுப்பானவர்கள்.

01

இறைச் செய்தியை கொண்டுவருதல்.

இது ஜிப்ரீல் அவர்களின் பணியாகும். அல்லாஹ் கூறுகிறான் : “(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.”

(அல்குர்ஆன் 16:102)
 

“மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார். (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்).”

(அல்குர்ஆன் 26:192- 194)
 

மழை பொழியச் செய்து, பூமியை வளப்படுத்தல்.

இது மீகாஈல் அவர்களின் பணியாகும். யஹூதிகளில் சிலர் நபி  அவர்களிடம் ஐந்து விடயங்கள் பற்றி வினவுகின்றனர். அவற்றிற்கு சரியான பதில்களை அளித்தால் நபியவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்பதாகவும் கூறுகின்றனர். அதில் இறுதி அம்சமாக, “உன் தோழர் யார் எனக் கூறும் என வினவுகின்றனர். அதற்கு நபியவர்கள் ஜிப்ரீல் எனக் கூற, அவர் தண்டனைகளை எம்மீது இறக்கக்கூடியவர். அவர் எமது எதிரி. அருள், தாவரங்கள், மழை போன்றவற்றை இறக்கக்கூடிய மீகாஈல் என நீர் குறிப்பிட்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்”

(அஹ்மத் தொடர்புடையது)
 

02

ஊதுகுழலை ஊதுதல

இவ்வுலகம் அழிவதற்கும், மறுமையில் எழுப்பப்படுவதற்கும் ஊதுகுழலை ஊதுவது இஸ்ராபீல் அவர்களின் பணியாகும். அல்லாஹ் கூறுகிறான் : “ஸூர் (ஊதுகுழல்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.”

(அல்குர்ஆன் 39:68)
 

இவர்கள் மூவருமே மலக்குமார்களின் தலைவர்கள். ஏனெனில் இவர்களின் பொறுப்புக்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. ஜிப்ரீல்  உள்ளங்களின் வாழ்வுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். மீகாஈல்  தாவரங்களின் வாழ்வுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ராபீல்  உடல்களின் வாழ்வுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மூவரிலும் பரிசுத்த ஆவியாக ஜிப்ரீல்  இருப்பதனால் அவரே இம்மூவரிலும் சிறந்தவராகத் திகழ்கிறார

மனிதவர்க்கத்தை பாதுகாத்தல்.

அல்லாஹ் கூறுகிறான் : “மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.”

(அல்குர்ஆன் 13:11)
 

மனிதவர்க்கத்தின் செயல்களைப் பாதுகாத்தல்.

அல்லாஹ் கூறுகிறான் : “(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.”

(அல்குர்ஆன் 50:17-18)
 

இறைவிசுவாசிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு உதவி செய்தல்.

அல்லாஹ் கூறுகிறான், “(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில்நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.”

(அல்குர்ஆன் 08:12)
 


03

உயிர்களைக் கைப்பற்றுதல்.

இது மலகுல் மவ்த் இன் பணியாகும். அல்லாஹ் கூறுகிறான் : “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். ”

(அல்குர்ஆன் 32:11)
 

“அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.”

(அல்குர்ஆன் 06:61)
 

மரணத்தின் பின் மண்ணறையில் வைத்து தனது இறைவன் பற்றியும், தனது மார்க்கம் பற்றியும், தனது நபி பற்றியும் கேள்வி கேட்டல்.

இது முன்கர் மற்றும் நகீர் ஆகிய இருவரினதும் பணியாகும். நபி அவர்கள் கூறினார்கள் : “ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்...'அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்... "

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது 'எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான். உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை' என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமேசெவியுறும் அளவுக்கு அவன் அலறுவான

(புஹாரி)
 

மற்றொரு அறிவிப்பில், “ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டால். அவரிடன் நீள நிறத்திலும், கறுப்பு நிறத்திலும் இரு வானவர்கள் வருவார்கள். அவ்விருவரில் ஒருவர் முன்கர் எனவும், மற்றையவர் நகீர் எனவும் அழைக்கப்படுவார்..

(திர்மிதி )
 

சிசுவைப் பராமரித்தல்.

சிசுவுக்கு உயிர் ஊதுதல், சிசுவின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயற்பாடுகள், நல்லவர்-கெட்டவர் எனும் வகைப்படுத்தல் போன்றவற்றை எழுதுதல் என்பனவே இவர்களின் பணியாகும். "நபி  அவர்கள் கூறினார்கள் : “உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் இந்திரியமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும"

(புஹாரி)
 
04

நரகின் காவலாளிகளாக கடம

அல்லாஹ் கூறுகிறான் : “அன்றியும், நரகக் காவலாளிகளாக மலக்குகள் அல்லாமல் வேறு யாரையும் நாம் ஆக்கவில்லை”

(அல்குர்ஆன் 74:31)
 

“மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.”

(அல்குர்ஆன் 43:77)
 

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.”

(அல்குர்ஆன் 66:6)
 

முஃமின்களுக்காக பாவமன்னிப்புக் கோரல், அவர்களுக்காக பிரார்த்தித்தல், அவர்களுக்கு சுபசெய்தி கூறி, சுவனத்தில் க ௌரவித்தல்.

அல்லாஹ் கூறுகிறான் : “அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். “இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாய�ோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்)

(அல்குர்ஆன் 40:7-9)
 

மேலும் கூறுகிறான் : “நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.”

(அல்குர்ஆன் 41:30)
 

“நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள். “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)”

(அல்குர்ஆன் 13:23-24)
 



மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், அவர்களுக்கு அருளாகவும், உபதேசமாகவும், அவர்களுக்கான வாழ்வியல் சான்றாகவும், அனைத்து விடயங்களையும் தெளிவாக விளக்கிடும் நூலாகவும் அல்லாஹ் தனது நபிமார்களுக்கு வேதங்களை இறக்கிவைத்தான் என நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும அல்லாஹ்வால் இறக்கிவைக்கப்பட்ட வேதங்களை நம்பிக்கைகொள்ளும் போது பின்வரும் விடயங்களை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அவை வருமாறு:

1. இது உண்மையை போதிக்கும் நோக்கில் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும். மேலும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.”

(அல்குர்ஆன் 03:03)
 

இவ் வேதங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளினதோ, அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களினதோ சொந்தக் கருத்துக்கள் இன்றி பரிசுத்தமான, எவ்விதக் கையூடல்களும் இன்றிய அல்லாஹ்வின் வார்த்தைகளாகும்.

2 Related by Muslim, 8.

2. பெயர் குறிப்பிட்டு வந்துள்ள வேதங்களை குறிப்பாகவும், பெயர் குறிப்பிடப்படாத ஏனைய வேதங்களை பொதுவாகவும் நம்பிக்கைகொள்ள வேண்டும்.

இவற்றில் நான்கு வேதங்கள் பெயர் குறிப்பிடப்பட்டு வந்துள்ளன. அவை வருமாறு:

அ. தவ்ராத் வேதம

இது மூஸா  அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும். அல்லாஹ் கூறுகிறான்: “அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான். மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).”

(அல்குர்ஆன் 07:144-145)
 

மேலும் கூறுகிறான் : “நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தையும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்”

(அல்குர்ஆன் 05:44)
 
2 Related by Muslim, 8.

ஆ. இன்ஜீல் வேதம்.

அது ஈஸா அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும். அல்லாஹ் கூறுகிறான் : “பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம்”

(அல்குர்ஆன் 57:27)
 

“இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில்நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.”

(அல்குர்ஆன் 05:46)
 

ஸபூர் வேதம்.

இது தாவுத்  அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும். அல்லாஹ் கூறுகிறான் : “இன்னும் தாவூதுக்கு ஸபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.”

(அல்குர்ஆன் 17:55)
 

அல்குர்ஆன்.

இது முஹம்மத்  அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும். அனைத்து வேதங்களிலும் இதுவே மகத்தானதாகும். அல்லாஹ் கூறுகிறான் : “மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது.” (அல்குர்ஆன் 05:48), “உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்”

(அல்குர்ஆன் 25:01)
 

இவை தவிர இப்றாஹிம்  அவர்களுக்கு ஓர் ஆகமமும் அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருந்தது. அல்லாஹ் கூறுகிறான் : “ஆனால் மறுமை (வாழ்க்கை)ய�ோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும், இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.”

(அல்குர்ஆன் 87:17-19)
 

3. அவ் வேதங்களில் திரிபுபடுத்தப்படாத செய்திகளை உண்மைப்படுத்திட வேண்டும்.

01

முன்சென்ற சமூகத்திற்கு இறக்கப்பட்ட வேதங்களில் சொல்ரீதியாகவும், பொருள்ரீதியாகவும் அதிக மாற்றங்கள் இடம்பெற்று, திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அல்லாஹ் எமக்கு அறிவிக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான், “(இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள்”

(அல்குரஆன் 05:13)
 

“மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்”

(அல்குர்ஆன் 05:41)
 

“நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போது தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அத அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.”

(அல்குர்ஆன் 03:78)
 
02

ஆனால் அல்குர்ஆனில் இது போன்ற எவ்வித திரிபுகளும், சேர்க்கைகளும், குறைபாடுகளும் இது வரைக்கும் இடம்பெறவில்லை. இனியும் இடம்பெறப்போவதுமில்லை. ஏனெனில் இதனைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வை ஏற்றுள்ளான். அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.”

(அல்குரஆன் 15:09)
 

“நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும். அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.”

(அல்குர்ஆன் 41:41)
 

இதனடிப்படையில் முன்சென்ற வேதங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளையும், சம்பவங்களையும் நாம் மூன்று நிலைமைகளில் வைத்து அவதானிக்க முடிகின்றது. அவை வருமாற

அ. அவை அல்குர்ஆனோடு ஒத்துப்போதல்.

முன்சென்ற வேதங்களில் குறிப்பிடப்படும் செய்திகளும், சம்பவங்களும் அல்குர்ஆனோடு ஒத்துப்போனால் அவையதார்த்தமானசெய்திகள் என எம்மால் உறுதிப்படுத்திட முடியும். ஏனெனில் அவற்றுக்கு சான்றாக அல்குர்ஆனே திகழ்கிறது. இதற்கு உதாரணமாக நூஹ்  காலத்து பிரளயம், இப்றாஹிம், யூசுப், மூஸா  போன்றோரின் சம்பவங்கள், பிர்அவ்ன் நீரில் மூழ்குதல், ஈஸா  அவர்களின் அற்புதங்கள் போன்ற ஏராளமான செய்திகளையும், சம்பவங்களையும் எவ்வித மேலதிக விளக்கங்களுமின்றி எம்மால் உறுதியாக நம்ப முடிகிறது.

ஆ. அவை அல்குர்ஆனுக்கு முரணாக இருத

முன்சென்ற வேதங்களில் குறிப்பிடப்படும் செய்திகளும், சம்பவங்களும் அல்குர்ஆனுக்கு முரணாக இருப்பின் அவை பிழையான செய்திகள் என எம்மால் உறுதிப்படுத்திட முடியும். ஏனெனில் அல்குர்ஆன் இத்தகைய சம்பவங்கள் குறித்து எதையுமே எமக்கு அறிவிக்கவில்லை. இத்தகைய செய்திகளும், சம்பவங்களும் அவர்கள் வாய்வழியாக அறிவித்து, அவர்களின் கைப்பட எழுதிய பொய்யான தகவல்களாகும். லூத்  அவர்கள் மதுபானம் அருந்தியுள்ளார்கள், தனது இரு பெண்பிள்ளைகளுடனும் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள், ஈஸா  அவர்கள் கடவுள் அல்லது கடவுளின் குமாரர், அல்லது மூன்றாவது தரத்தில் இருக்கும் கடவுள் என்றெல்லாம் மனம்போனபோக்கில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அல்லாஹ் இந் நபிமார்களைசங்கைப்படுத்தி, அவர்களை தூய்மைப்படுத்துவானாக. இவர்கள் கூறும் இட்டுக்கட்டான செய்திகளை விட்டும் அல்லாஹ் மிகவும் தூய்மையானவன


03

இ. அவை அல்குர்ஆனுக்கு ஒத்ததாகவோ, முரணாகவோ இல்லாமல் இருத்தல்.

முன்சென்ற வேதங்களில் இவ்வாறு இடம்பெறும் செய்திகளையும், சம்பவங்களையும் நாம் உண்மைப்படுத்திடவோ, பொய்ப்பிக்கவோ கூடாது. ஏனெனில் நபி  அவர்கள் கூறினார்கள் : “வேதக்காரர்கள் உங்களுக்கு ஏதும் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டால் அவர்களை உண்மைப்படுத்திடவும் வேண்டாம், பொய்ப்பிக்கவும் வேண்டாம். மாறாக அல்லாஹ்வையும், வேதங்களையும், அவனது தூதர்களையும் நாம் விசுவாசம் கொள்கிறோம் என்று கூறுங்கள். அப்போத அவை உண்மையாக இருந்தால் நீங்கள் அவர்களைப் பொய்ப்பித்திடவோ, பொய்யாக இருந்தால் உண்மைப்படுத்திடவோ இல்லை.”

(அஹ்மத் தொடர்புடையது)
 

என்றாலும் இச்செய்திகளைப் பற்றி பேசுவது ஆகுமானது. நபி  அவர்கள் கூறினார்கள்: “என்னிடமிருந்து ஒரேய�ொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை.”

(அல்-புகாரி தொடர்புடையது)
 

4. அல்குர்ஆன் குறிப்பிடுபவற்றில் மாத்திரமே சட்டமியற்ற வேண்டும்.

முன்சென்ற வேதங்களை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திற்கும் சான்றாகவும், தீர்ப்பளிக்கும் நூலாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கிவைத்தான். மற்றைய வேதங்களில் பொதிந்துள்ள நல்ல விடயங்களை இது வரவேற்கிறது. அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களில் சிலதை மாற்றியமைத்து, வேறு சிலதை முழுமையாக ஏற்று, சிலசட்டங்களைமேலதிகமாகவும் அதனுடன் இணைத்துள்ளது. எனவே அல்குர்ஆனைத் தவிர்த்து முன்சென்ற வேதங்களை மார்க்கமாகக் கொள்வது கூடாது.அல்லாஹ் தவ்ராத் பற்றியும், இன்ஜீல் பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, அல்குர்ஆன் பற்றி பின்வருமாறு கூறுகிறான் : : “மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருளிய (சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.” “இன்னும் அல்லாஹ் அருளிய (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?”

(அல்குர்ஆன் 05:48-50)
 

மேலும் கூறுகிறான் : “(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.”

(அல்குர்ஆன் 04:105)
 
04

5. வேதங்கள் அனைத்தையுமே நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “(அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.”

(அல்குர்ஆன் 02:85)
 

மேலும் கூறுகிறான் : “(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்”

(அல்குர்ஆன் 03:119)
 

6. வேதங்களை மறைப்பதோ, திரிபுபடுத்துவதோ, அவற்றில் கருத்து முரண்படுவதோ, அல்லாஹ்வின் வார்த்தைகளில் சிலதை எடுத்துவிட்டு, சிலதை விட்டுவிடுவதோ தடுக்கப்பட்ட செயலாகும

அல்லாஹ் கூறுகிறான் : “தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.”

(அல்குர்ஆன் 03:187)
 

“எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது? இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருளச் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.”

(அல்குர்ஆன் 02:174-176)
 

“அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!”

(அல்குர்ஆன் 02:79
 

சிலர் தமக்கிடையில் கருத்துமுரண்படுவதை நபி  அவர்கள் செவியேற்றுவிட்டுக் கூறினார்கள் : “உங்களுக்கு முன்சென்றவர்கள் இதனால் தான் அழிந்தார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் சிலதை விட்டுவிட்டு, சிலதை மாத்திரம் எடுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வின் வேதம் இறங்கியதன் நோக்கம் சிலதை வைத்து சிலதை உண்மைப்படுத்துவதே எனவே அல்லாஹ்வின் வேதத்தில் சிலதைக் கொண்டு .சிலதை பொய்ப்பிக்காதீர்கள். அவற்றில் நீங்கள் அறிந்த விடயங்கள் இருப்பின் அவற்றைக் கூறுங்கள். அறியாத விடயங்கள் இருப்பின் அவற்றை அறிந்தவரின் பொறுப்பில் விட்டுவிடுங்கள்”

(அஹ்மத் தொடர்புடையது)
 

அல்லாஹ் மனிதர்களில் சில ஆண்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு இறைச் செய்தியை வழங்கி, அவர்களை தனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவதற்கும், அவர்களை எச்சரிப்பதற்கும், தன்னை மாத்திரமே வணங்கி, பிற கடவுள் வணக்கங்களை தவிர்த்திட வேண்டும் எனும் செய்தியை அடியார்களுக்கு எத்திவைப்பதற்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களை இவ் உலகிற்கு அனுப்பிவைத்தான் என நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.”

(அல்குர்ஆன் 22:75)
 

“(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).”

(அல்குர்ஆன் 16:43)
 

மேலும் கூறுகிறான் : “தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 04:165)
 

“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; (அவனல்லாது வணங்கப்படும்) தாகூத்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்”

(அல்குர்ஆன் 16:36)
 

நபிமார்களைநம்பிக்கைகொள்வதில் பின்வரும் விடயங்கள் அவசியம் கவனிக்கப்படவேண்டியவை. அவை வருமாறு:

1. அவர்களின் தூதுத்துவம் பரிசுத்தமான அல்லாஹ்வின் நாட்டத்தின் மூலமும், அவனின் மகத்துவத்தின் மூலமும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது என நம்பிக்கை கொள்ள வேண்டும

அல்லாஹ் கூறுகிறான் : “அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.”

(அல்குர்ஆன் 06:124)
 

“மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம். இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.”

(அல்குர்ஆன் 43:31-32)
 

நபித்துவம், தூதுத்துவம் என்பது ஓர் சில் சூபியாக்களும், ஸனாதிகாக்களும் நினைப்பது போன்று உடலை வருத்தி, செயற்படுவதனால் கிடைப்பதில்லை. அவ்வாறே தத்துவவியலாளர்கள் நினைப்பது போன்று ஆன்மீக சக்தியின் ஒன்று கூடல், புத்தி ஏற்காத கற்பனைகள் போன்றவற்றின் தாக்கத்தினாலும் கிடைப்பதில்லை. மாறாக இது அல்லாஹ்வின் பரிசுத்தத் தெரிவாகும். மனிதர்களில இத் தூதுத்துவத்திற்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதானது அல்லாஹ்வின் மகத்துவமிக்க முடிவாகும்.

2. பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் தூதர்களை குறிப்பாகவும், பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் தூதர்களை பொதுவாகவும் என அனைத்து நபிமார்களையும், ரஸூல்மார்களையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அவனின் தூதர்களில் சிலரின் பெயர்களை பின்வரும் அல்குர்ஆன் வசனங்களில் -இப்றாஹிம்  அவர்கள் பற்றி கூறியதன் பின்- குறிப்பிடுகிறான். அல்லாஹ் கூறுகிறான் : "“நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகிய�ோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். இன்னும், ஸகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.”"

(அல்குர்ஆன் 06:84-86)
 

"“திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லைய�ோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை”"

(அல்குர்ஆன் 40:78
 

இவ்வாறு நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரினதும் அழைப்புப் பணியின் கொள்கை ஒன்றாகவே இருந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான் : “நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே”

(அல்குர்ஆன் 42:13)
 

இவர்களில் ஒருவரை மறுப்பதானது ஒட்டுமொத்த நபிமார்களையும், ரஸூல்மார்களையும் மறுப்பதாக அமைந்துவிடும். அல்லாஹ் கூறுகிறான் : “நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.”

(அல்குர்ஆன் 26:105)
 

நூஹ்  அவர்கள் அல்லாஹ்வின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே நபிமார்களிலும், ரஸூல்மார்களிலும் சிலரை சிலரை விட வேறுபிரித்து பார்ப்பதோ, அல்லது அவர்களில் சிலரை நம்பிக்கை கொண்டு, சிலரை நிராகரித்து விடுவதோ கூடாத செயலாகும். அவ்வாறு செய்பவர் இறை நிராகரிப்பாளராக மாறிவிடுவார். அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடைய�ோனாகவும் இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 04:150-152)
 

கடவுளுடைய மாநாடுகளே கடவுளின் ஆவிக்குரியவை, அவை உட்பட:

01

3. அவர்களை உண்மைப்படுத்தி, அல்லாஹ் பற்றி அவர்கள் கூறிய செய்திகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.”

(அல்குர்ஆன் 04:170)
 

“அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து) பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.”

(அல்குர்ஆன் 39:33)
 

“விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.”

(அல்குர்ஆன் 53:01-05)
 
02

அல்குர்ஆனிலும், நபி  அவர்களின் பொன்மொழிகளிலும் இடம்பெற்றுள்ள முன்சென்ற நபிமார்களினதும், ரஸூல்மார்களினதும் தகவல்களை நாம் உண்மைப்படுத்துவது கட்டாயக் கடமையாகும். அவர்கள் பற்றி கூறப்படும் இஸ்ராஈலிய்யத் எனப்படும் மிகை கூடியசெய்திகளையும், வரலாறுகளையும் ‘வேதங்களை நம்பிக்கை கொள்ளுதல்’ எனும் தலைப்பில் பார்த்ததன் பிரகாரம் வரையறை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறே நபி  அவர்கள் கூறியதாக கிடைக்கப்பெறும் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்களின் வரையறைகளுடன் அதன் உண்மைத் தன்மையை அலசி ஆராய வேண்டும். அதில் சரியென முடிவாகும் செய்திகளை அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

4. அவர்களுக்கு வழிபட்டு, அவர்களை பின்பற்றி, அவர்கள் கூறிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை.”

(அல்குர்ஆன் 04:64)
 

ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்களுக்காக அனுப்பப் பட்ட நபிமார்களை பின்பற்றுவது அவசியான ஒன்றாகும். அவர்களில் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத்  அவர்களின் மார்க்கம் இதற்கு முன்னர் வந்தநபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட மார்க்கங்கள் அனைத்தையும் ரத்து செய்யும் வகையில் அமைந்துள்ளது. எனவே அவரின் மரணத்தின் பின்னரும் யாரெல்லாம் அவரைப் பற்றி செவியுருகிறார்களோ அவர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றி, அவருக்கு வழிபடுவது இஸ்லாம் குறிப்பாக வலியுறுத்தும் கட்டாயக் கடமையாகும அல்லாஹ் கூறுகிறான் : “எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”

(அல்குர்ஆன் 07:157-158)
 

03

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.”

(அல்குர்ஆன் 03:31-32)
 

“உம் இறைவன் மேல்சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்தசச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.”

(அல்குர்ஆன் 04:65)
 

5. அவர்களோடு நல்லமுறையில் நடந்து, அவர்களுடன் நேசம் வைத்து, அவர்களை கண்ணியப்படுத்திட வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஸகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்களும்தாம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடைய�ோராவார்கள்.”

(அல்குர்ஆன் 05:55)
 

“அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.

(அல்குர்ஆன் 03:52)
 
04

(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.”

(அல்குர்ஆன் 09:24)
 

“மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.”

(அல்குர்ஆன் 37:181)
 

தன் தூதர் முஹம்மத்  அவர்கள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: தன் தூதர் முஹம்மத்  அவர்கள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: “(ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, அவனுக்கு (சன்மார்க்கத்தில்) உதவி, அவனைச் சங்கை செய்து, காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்).”

(அல்குர்ஆன் 48:09)
 

“இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.”

(அல்குர்ஆன் 33:56)
 

நபி  அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' . அறிவிப்பவர்: அனஸ் , நூல்: புஹாரி 15, முஸ்லிம் 44

(அல்-புகாரி தொடர்புடையது)
 



மனிதர்கள் மரணித்து, மண்ணறைகளில் இருந்து எழுப்பப்பட்டு, அவர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடாத்தி, அதற்கான கூலியாக சுவர்க்கம் அல்லது நரகத்தை பரிசாக வழங்கும் ஓர் நாளே மறுமை என நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.அல்லாஹ் கூறுகிரான் : “மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.”

(அல்குர்ஆன் 14:42).
 

“(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண் “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.”

(அல்குர்ஆன் 64:07).
 

“மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீய�ோர் எனப்) பிரிந்து விடுவார்கள். ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள். இன்னும், எவர்கள் காஃபிராகி, நம்முடைய வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அ(த்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.”

(அல்குர்ஆன் 30:14-16)
 

மறுமை நாளை நம்பிக்கை கொள்வதில் பின்வரும் விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை வருமாறு:

1. மரணித்திற்குப் பின்னால் நடைபெறுபவற்றை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மரண வேளையில் மலக்குமார்களை காணுதல், திரையுமறைவான கப்றில் (ஆலமுல் பர்ஸஹ்) இரு மலக்குகள் மனிதனிடம் அவனது இறைவன், அவன் பின்பற்றிய மார்க்கம், அவன் பின்பற்றிய நபி முதலியவைகள் பற்றி விசாரணை நடாத்துதல், அதன் முடிவாக கப்றில் சுகபோகத்தைய�ோ, அல்லது வேதனையைய�ோ அம் மனிதன் அனுபவித்தல் போன்றன மரணித்ததன் பின்னர் நடைபெறும் சில நிகழ்வுகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான், : “மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்ற

(அல்குர்ஆன் 08:50)
 

“நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.”

(அல்குர்ஆன் 41:30).
 

“மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).”

(அல்குர்ஆன் 40:45).
 

நபி  அவர்கள் கூறினார்கள் : “ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்...'அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்...

2 Related by Muslim, 8

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப்படும்போது 'எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான். உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை' என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான

(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் , நூல )
 

“'நபி  அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைவு எடுத்துக் கொள்வதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி  அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்  அவர்கள் கூறினார்கள

(அறிவிப்பவர்: இப்னு அப)
 

2. யுக முடிவு நாளையும், அதன் அடையாளங்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும

அல்லாஹ் கூறுகிறான் : : “அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா? அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க: அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.”

(அல்குர்ஆன் 42:17-18)
 

“எனவே இவர்கள் தங்கள்பால் திடுகூறாக (தீர்ப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன; ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.”

(அல்குர்ஆன் 47:18)
 

யுக முடிவு நாள் நெருங்கும் போது ஏற்படும் மாபெரும் அடையாளங்களில் சிலதை பின்வரும் நபிமொழி குறிப்பிடுகிறது.(ஒருமுறை) நாங்கள் (நபி  அவர்களது அறைக்குக் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நபி  அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள், "யுகமுடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி  அவர்கள், "நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுகமுடிவு நாள் ஏற்படவே செய்யாது" என்று கூறிவிட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்: 1. புகை, 2. தஜ்ஜால், 3. (பேசும்) பிராணி, 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5. மர்யமின் புதல்வர் ஈசா  அவர்கள் இறங்குதல், 6. யஃஜூஜ், மஃஜூஜ், 7.8.9. மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும் எனக் கூறினார்கள்

(அறிவிப்பவர்: ஹுதைபா )
 

யுக முடிவு நாள் என்பது திடீரெனவும், அவசரமாகவும் நிகழ்ந்துவிடும். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : “அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.”

(அல்குர்ஆன் 07:187)
 
2 Related by Muslim, 8.

01

“மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 16:77).
 

“ஸூர் (எக்காளம்) ஊதப்பட்ட உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்ட உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.”

(அல்குர்ஆன் 39:68).
 

3. மீளெழுப்புதல் பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஸூர் ஊதப்பட்டதும் கப்றுகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்பாட்டுவான். அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவரும் காலில் செருப்பின்றி, உடலில் ஆடையின்றி, விருத்த சேதனமும் செய்யப்படாமல் எதுவுமே அற்ற பிராணிகளாக ஓர் இடத்தில் ஒன்றுகூடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான் : “பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.” (அல்குர்ஆன் 39:68), “மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.”

(அல்குர்ஆன் 36:51).
 

நபி  அவர்கள் கூறினார்கள், “நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்.

(அறிவிப்பவர்: இப்னு அப)
 
02

4. மறுமை நாளில் நடைபெற இருக்கும் நிகழ்வுகள் குறித்து நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-”

(அல்குர்ஆன் 83:06)
 

மாபெரும் திடலில் அனைத்து மனிதர்களும் அல்லாஹ்வின் முன்னால் நீண்ட நேரம் நின்றிருப்பார்கள். அலரல் சப்தங்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டிருக்கும். பார்வைகள் தாழ்த்தப்பட்டுவிடும். சூரியன் மிக அருகாமையில் கொண்டுவரப்படும். வியர்வை அவர்களை மூழ்கடித்துவிடும். நீர்த்தடாகம் அவர்களுக்காக கொண்டுவரப்படும். செயற்பாடுகள் அனைத்தும் பதியப்பட்ட பட்டோலைகள் ஒவ்வொருவருக்கும் விநிய�ோகிக்கப்படும். செயல்களை நிறுப்பதற்காக தராசுகள் கொண்டுவரப்படும். இப்பயங்கரமான நாளில் ஸிராத் எனும் பாலம் நட்டப்படும். இவைகள் அனைத்தும் மறுமையில் நடைபெறும் பயங்கரமான நிகழ்வுகளாகும். இவற்றை நம்பிக்கை கொள்வது அவசியான ஒன்றாகும்.

5. விசாரணை பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.” (அல்குர்ஆன் 88:25-26), “ஆகவே எவனுடைய பட்டோலை எவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.”

(அல்குர்ஆன் 84:07-08).
 

“எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.” (அல்குர்ஆன் 99:07-08). “இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.”

(அல்குர்ஆன் 21:47).
 

மனிதர்கள் இரண்டு விதமாக விசாரிக்கப்படுவார்கள்.

அ. முஃமின்களின் விசாரணை:முஃமின்களை அல்லாஹ் இரகசியமாகவும், துருவித்துருவியும் மறுமையில் விசாரணை செய்வான். அவர்களின் இரகசிய விசாரணைபற்றி ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள் :

நான் இப்னு உமர்  அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர்  'அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக்கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம்


03

உலகில்நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவார்கள்' என்று நபி அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள

(அறிவிப்பவர்: இப்னு உமர)
 

முஃமின்களில் பெரும்பாவம் செய்து, அல்லாஹ்வின் நாட்டப்படி நரகில் நுழைந்து மீண்டும் சுவனத்தில் நுழைய இருப்போரே துருவித்துருவி விசாரிக்கப்படுவார்கள். இது பற்றி ஆஇஷா  அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: “(ஒரு முறை) இறைத்தூதர்  அவர்கள் 'மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்' என்று கூறினார்கள். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' என்றல்லவா அல்லாஹ் கூறினான்?' (திருக்குர்ஆன் 84:08) என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் அவர்கள் 'இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை' என்று கூறினார்கள்.”

(அறிவிப்பவர்: ஆஇஷா , நூல்: )
 

ஆ. இறைநிராகரிப்பாளர்களின் விசாரணை:

அல்லாஹ்விடம் மறுமைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்மைய�ோ, தீமைய�ோ இவர்களிடம் இல்லாததால் நல்லவை, கெட்டவை எனும் விசாரணை இவர்களுக்கு இல்லை. அல்லாஹ் கூறுகிறான் : “இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.”

(அல்குர்ஆன் 25:23)
 

அவர்களின் நற்செயல்கள் இவ்வுலகோடு நிறுத்தப்பட்டுவிடும். மறுமையில் அவர்கள் செய்த நல்லவற்றுக்கு எவ்விதப் பயனும் இருக்காது. இச்செய்தி பற்றி “நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவார்கள்' என்று நபி  அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்' என்ற இப்னு உமர்  வின் கூற்றும் பரைசாற்றுகிறத

(அறிவிப்பவர்: இப்னு உமர் , நூல்: )
 

6. விசாரணைக்குப் பின்னரான கூலி வழங்கலை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

சுவனமும், நரகமும் உண்மை என நாம் அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவனைப் பயந்து, வாழ்ந்த அடியார்களுக்காக சுவனத்தை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். அதில் எந்தக் கண்களும் கண்டிராத, எந்த செவியும் கேள்வியுற்றிராத, சிந்தனையாளும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அருட்கொடைகள் இருக்கின்றன. அவ்வாறே இவ்வுலகில் அல்லாஹ்வை நிராகரித்து வாழ்ந்த அடியார்களுக்காக நரகத்தை அவன் தயார்படுத்தி வைத்துள்ளான். அதிலும் எந்தக் கண்களும் கண்டிராத, எந்த செவியும் கேள்வியுற்றிராத, சிந்தனையாளும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வேதனையை தரக்கூடிய பலவகையான தண்டனைகள் இருக்கின்றன.

04

அல்லாஹ் கூறுகிறான் : “பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.”

“அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும். “எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.”

“எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்படவும் மாட்டாது; அன்றியும் அந்(நரகத்) திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.”

“இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களைசெய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).”

(அல்குர்ஆன் 35:32-37).
 

அல்லாஹ் தன் ஆழமான அறிவாற்றலால் அனைத்துப் படைப்பினங்களினதும் விதிகளை நிர்ணயித்துள்ளான், அவற்றை லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும் பதிவேட்டில் எழுதி, தன் நாட்டப்படி அவற்றை அமுல்படுத்துகிறான், தனது ஆற்றலால் அவற்றை தோற்றுவிக்கிறான் என நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.”

(அல்குர்ஆன் 54:49),
 

“அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.”

(அல்குர்ஆன் 25:02)
 

விதியைப் பற்றி நம்பிக்கை கொள்ளும் விடயத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன. அவை வருமாறு:

1. அல்லாஹ்வின் அறிவாற்றல் பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் அறிவாற்றலுக்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அவன் அனைத்துப் படைப்பினங்களினதும் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட காலநிர்ணயம், சம்பாத்திய நிர்ணயம் போன்றவற்றையும், தன் அடியார்களின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட வணக்கவழிபாடுகள், பாவகாரியங்கள் போன்றவற்றையும் நுணுக்கமாகவும், விரிவாகவும் அறிந்தவன்.அல்லாஹ் கூறுகிறான் : “அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.”

(அல்குர்ஆன் 02:29)
 

“இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.”

(அல்குர்ஆன் 06:96).
 

தன்னை யார் வழிபடுவார், தனக்கு யார் மாறுசெய்வார் என்பதையும், யாருக்கு வாழ்வை நீடிக்க வேண்டும், யாரின் வாழ்வை குறைக்க வேண்டுமென்பதையும் நன்கறிந்தவன்.

2. லவ்ஹுல் மஹ்ஃபூலில் அனைத்து விதிகளையும் அல்லாஹ் எழுதி வைத்துள்ளான் என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.”

(அல்குர்ஆன் 57:22)
 

“அவன் மறைவான(யா) வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.”

(அல்குர்ஆன் 34:03)
 

நபி  அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தத

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ)
 

“முதன் முதலில் அல்லாஹ் எழுதுகோலைப் படைத்து, அதற்கு ‘எழுது’ என கட்டளையிட்டான். ‘இறைவா, நான் எதை எழுதுவது?’ எனக் கேட்க, ‘யுக முடிவு நாள் வரும் வரைக்குமான அனைத்தினதும் விதிகளை எழுது’ எனக் கூறினான்.

(அறிவிப்பவர்: உபாதத் இப்னு ஸாபித,)
 

அல்லாஹ் தனது அறிவாற்றல் பற்றியும், விதிகளை எழுதிவைத்துள்ளது குறித்தும் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடுகிறான் : “நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.”

(அல்குர்ஆன் 22:70)
 

3. அமுலாக்கப்படும் அல்லாஹ்வின் நாட்டத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நாடியவை நிச்சயம் நடந்தே தீரும். அவன் நாடாதவைகள் என்றும் நடைபெறாது. அவன் ஒன்றைக் கொடுக்க நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுக்க வேண்டுமென நினைத்தால் அதை யாராலும் கொடுக்கவும் முடியாது. அவனின் முடிவுகளை யாருக்கும் மாற்றிட முடியாது. அவனின் ஆட்சியில் அவனுக்கு விருப்பமில்லாத எதுவும் நடைபெறாது. தனது அருளால் தான் நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுவான். தனது நீதத்தால் தான் நாடியவர்களை வழிகெடச் செய்வான். அவனது சட்டத்தில் கையடிப்பவர் எவருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.”

(அல்குர்ஆன் 02:253)
 

“உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்”

(அல்குர்ஆன் 81:28-29)
 
2 Related by Muslim, 8. uploads/1544772231messenger5.jpg

கடவுளுடைய மாநாடுகளே கடவுளின் ஆவிக்குரியவை, அவை உட்பட:

01

4. அல்லாஹ்வே அனைத்துப் படைப்பினங்களையும் உருவாக்குகிறான், படைக்கிறான் என நம்பிக்கைகொள்ள வேண்டும்.

அல்லாஹ் மாபெரும் படைப்பாளன். அவனைத் தவிர இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் படைப்பினங்கள். ஒவ்வொரு பொருளினதும் தன்மைகள், பண்புகள், அசைவுகள் போன்றன யாவும் அவனால் உருவாக்கப்படுபவை, படைக்கப்பட்டவை.அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.”

(அல்குர்ஆன் 39:62)
 

“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”

(அல்குர்ஆன் 37:96)
 

அடியார்களின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை அல்லாஹ் படைத்தவைகளும் இருக்கின்றன. அவர்கள் சம்பாதித்துக் கொள்பவைகளும் இருக்கின்றன. அல்லாஹ் கூறுகிறான் : “அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!”

(அல்குர்ஆன் 02:286)
 
02

5. அல்லாஹ்வின் விருப்பமும், நாட்டமும் வெவ்வேறானது என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

சிலசமயம் நுணுக்கமான காரணத்துக்காகவும், உயரிய நோக்கத்திற்காகவும் அல்லாஹ் தான் விரும்பாதவற்றை நாடுவான். தான் நாடாதவற்றை விரும்புவான். அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவனது விருப்பத்தையும் ஒரு போதும் சமனாக மதிப்பிடமுடியாது.அல்லாஹ் கூறுகிறான் : “மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.”

(அல்குரஆன் 32:13)
 

“(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான்..”

(அல்குர்ஆன் 39:07)
 

6. விதியும், மார்க்கம் கூறுபவைகளும் என்றும் முரணாகாது என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும். எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம். ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ, இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ, அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.”

(அல்குர்ஆன் 92:04-10).
 

விதி என்பது படைப்பினங்களது அனைத்து விடயங்களையும் நிர்ணயித்தவனான அல்லாஹ் மாத்திரம் அறியக்கூடிய வகையில் மறைவாக இருக்கும் ஒன்றாகும். மார்க்கம் என்பது படைப்பினங்கள் தமது வாழ்வை சீரான பாதையில் எவ்வாறு செப்பனிட்டுக்கொள்ள வேண்டும் எனும் என அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் அடியார்களின் விதிகளை நிர்ணயித்து, அவர்களை விட்டும் அதனை மறைத்து வைத்துள்ளான். அவர்களுக்கு சில விடயங்களை எவி, சிலதைத் தடுத்து, தனது ஏவல்களுக்குக் கட்டுப்படவும


03

விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளவும் அவர்களை அவன் தயார்படுத்தி, உதவியும் புரிந்துள்ளான். அந்த ஏவல், விலக்கல்களை அமுல்படுத்துவதில் ஏதும் தடைகள் வரும்போது அவர்களுக்கு சலுகையும் வழங்கியுள்ளான். எனவே ஏவல்களை விடுவதற்கோ, பாவங்களைச் செய்வதற்கோ யாரும் அல்லாஹ்வின் விதியைக் காரணம் காட்ட முடியாது.

அல்லாஹ் கூறுகிறான், : “அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். “நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ்விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்” என்று நீர் கூறும்.”

(அல்குர்ஆன் 06:148-149)
 

மேற்குறிப்பிட்ட வசனத்தில் கவனிக்கத்தக்க மூன்று விடயங்கள் இருக்கின்றன.

1. இவர்களின் வாதம் பொய்யானதாகும். 2. பொய்யான வாதத்தை முன்வைத்ததன் காரணமாக அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை வந்திறங்கியது. விதி விடயத்தில் அவர்கள் கூறுபவற்றுக்கு ஏதேனும் ஆதாரம் வைத்திருந்தால் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களின் வாதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.ஊகங்களையும் வைத்தே அவர்கள் தமது வாதத்தை வைக்கின்றனர். அதனால் நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ்வின் பக்கம் வந்துவிட்டது.

இத்தகைய விதி விடயத்தில் இரு பிரிவினர் வழி தவறிச்சென்றுள்ளனர். அவர்கள் வருமாறு:

அ. கத்ரிய்யாக்கள்.இவர்கள் மனிதர்களின் செயற்பாடுகள் மாத்திரமே உண்மையானது எனும் கொள்கையைக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் விதியை மறுப்பவர்கள். இவர்கள் இரு தரப்பினராக நோக்கப்படுகின்றனர்:

04

1. எல்லை மீறியவர்கள் (குலாத்):

இக்கொள்கைக்கு இவர்களே முன்னோடிகள். இவர்கள் ஸஹாபாக்களின் இறுதிக் காலத்தில் தோற்றம் பெற்றார்கள். காரியங்கள் அனைத்தும் முன்னேற்பாடின்றி அவ்வப்போது தானாகவே நடைபெறுகின்றன என்பது இவர்களது வாதம். அதனால் அல்லாஹ்வின் அறிவு, எழுதப்பட்ட விதி, அவனின் நாட்டம், அவனின் படைப்பு போன்ற அனைத்தையும் மறுத்தார்கள். இவர்களுக்கு அந்நேரமே இப்னு அப்பாஸ், இப்னு உமர்போன்றோர் மறுப்பும் தெரிவித்துள்ளனர்.

2. முஃதஸிலாக்கள்:

இவர்கள் அல்லாஹ்வின் அறிவு, எழுதப்பட்ட விதி ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் நாட்டம், அவனின் படைப்பு ஆகிய இரண்டையும் மறுக்கின்றனர். மனிதர்கள் தமது செயல்களை அவர்களே படைத்துக்கொள்கின்றனர் என்பதே இவர்களின் முக்கிய வாதமாகும்.

ஆ. ஜபரிய்யாக்கள்.

இவர்கள் அல்லாஹ்வின் செயற்பாடுகள் மாத்திரமே உண்மையானது எனும் கொள்கையைக் கொண்டவர்கள். மனிதன் சுதந்திரமற்றவன். அவனின் அனைத்து செயல்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றது. மனிதனும், ஜடங்களும் ஒன்றே. ஜடப்பொருட்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அவ்வாறே இறைவனும் நம்மை செயல்பட வைக்கிறான் எனக் கூறுகின்றனர். இவர்களும் இரு தரப்பினராக நோக்கப்படுகின்றனர்.

1. சூபிஸ ஸனாதிகாக்கள்:

உலகில் மனிதன் ஜடப்பொருள் போன்றே நடாத்தப்படுகிறான். அவனுக்கென செயல் சுதந்திரம் கிடையாது என நம்புபவர்கள்.

2. அஷாஇராக்கள்:

மனிதன் செய்கின்ற எதையும் குற்றம்பிடிக்க முடியாது எனும் கொள்கையுடையவர்கள். அதாவது எந்தவொரு தாக்கமும் செலுத்தமுடியாத பெயரளிவலான சக்திதான் மனிதனுக்கு இருப்பதாகக் கூறுபவர்கள்.மேற்கூறப்பட்ட இரு முக்கிய பிரிவினர்களின் வாதங்களும் அல்குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையிலும், நடைமுறை வாழ்விலும் செல்லுபடியற்று போகின்றன.

1. விதியின் நான்கு படித்தரங்களில் சிலதைய�ோ, அனைத்தையுமோ மறுப்பவர்களுக்கு, விதி என்று ஒன்று இருக்கின்றது என அதிகமான அல்குர்ஆன் வசனங்களும், சரியான நபிமொழிகளும் நிரூபித்து, பதிலடிகொடுக்கின்றன. மனிதன் ஒரு விடயத்தை செய்ய ஆரம்பிக்கும் போது, அதை செய்யமுடியாமல் ஏதோ ஒரு தடை ஏற்படுவதைநடைமுறை வாழ்வில் அவர்களுக்கானபதிலடியாக நாம் நோக்கலாம்.

2. விதியை மாத்திரம் ஏற்றுக்கொள்பவர்களுக்கு, மனிதனுக்கு நாட்டம், ஓர் செயலை செய்யும் திறன், ஆற்றல் போன்றன அவனிடமே காணப்படுகிறது என அதிகமான அல்குர்ஆன் வசனங்களும், சரியான நபிமொழிகளும் நிரூபித்து, பதிலடிகொடுக்கின்றன. மனிதன் தனக்கு தேர்வுச் சுதந்திரம்

இருக்கும் விடயங்களையும், நிர்ப்பந்தமாக்கப்படும் விடயங்களையும் நன்கு பிரித்து நோக்கி, எதை எப்படி செய்யவேண்டும் எனும் திறன் கொண்டவன் என்பதைநடைமுறை வாழ்வில் அவர்களுக்கான பதிலடியாக நாம் நோக்கலாம். காரணங்களின்றி அல்லாஹ்வின் எச்செயல்களும் இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் பல இறைவசனங்கள், நபிமொழிகள் உள்ளன.